அதிசய சிவபக்தை.. 33 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் ஆச்சர்யம்..!!

தேநீர் மட்டுமே குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? முடியும் என்கிறார் சத்திஸ்கர்ரை சேர்ந்த ஒரு பெண்மணி . 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 10:49 PM IST
அதிசய சிவபக்தை.. 33 ஆண்டுகளாக டீ மட்டுமே குடித்து உயிர் வாழும் ஆச்சர்யம்..!! title=

தேநீர் மட்டுமே குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? முடியும் என்கிறார் சத்திஸ்கர்ரை சேர்ந்த ஒரு பெண்மணி . 33 ஆண்டுகளாக தேநீர் குடிப்பதன் மூலம் மட்டுமே உயிருடன் இருக்கும் அத்தகைய ஒரு பெண்ணைப் பற்றி இன்று நாம் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.

இந்த பெண்மணி சத்திஸ்கர்ரில் உள்ள கொரியா மாவட்டத்தின் பைகுந்த்பூர் பகுதியில் உள்ள பார்தியா கிராமத்தில் வசிக்கின்றார். பெயர் பல்லி தேவி. சுற்றியுள்ள பகுதியில் இருந்து பல மக்கள் இவரை சந்திக்க வருகிறார்கள்.

கடந்த 33 ஆண்டுகளாக, டீ மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார்.  முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும் இந்த பெண்மணியை கண்டு டாக்டர்களும்  ஆச்சரியப்படுகிறார்கள், தேநீர் (Tea) மட்டுமே குடித்து இவர் எப்படி உயிர்வாழ முடியும் என மிகவும் வியக்கின்றனர்.

உள்ளூர்வாசிகள் அவர்களை 'சாய் வாலி அத்தை'என்று அழைக்கிறார்கள். கடந்த 33 ஆண்டுகளாக பல்லி தேவி தேநீர் மட்டுமே குடித்து வருவதாக  மக்கள் சொல்கிறார்கள், இதைத் தவிர வேறு எதையும் அவள் சாப்பிடவோ குடிக்கவோ இல்லை.

பல்லி தேவிக்கு இப்போது கிட்டத்தட்ட 44 வயது. அவர் 6 ஆம் வகுப்பில் இருந்தபோது, ​​சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாக அவரது தந்தை கூறுகிறார்.

குழந்தை பருவத்தில், அவள் பிஸ்கட், டீயுடன் ரொட்டி என சாப்பிட்டு வந்தார், ஆனால் பின்னர் அவர் எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார். இப்போது அவர் தேநீர் மட்டுமே குடிக்கிறார்.

பல்லி தேவி தனக்கு இனி பசி ஏற்படுவதில்லை என்று கூறுகிறார். பல்லி தேவியை மருத்துவர்கள் முழுமையாக பரிசோதித்துள்ளனர். ஆனால் அவrஉக்கு எந்த நோயும் இல்லை என்பதை அறிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பல்லி தேவி வெளியில் எங்கும் செல்வதில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த சிவ பக்தர். அவர் தினமும் சிவனை வழிப்பட்டு பூஜை செய்கிறார். இது மட்டுமே தனது முக்கியமான வேலை என அவர் கூறுகிறார்.

ALSO READ | ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத பழைய உணவுகள் எது தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News