சனீஸ்வரர் தொந்தரவு இல்ல! இனி இந்த 3 ராசிகளுக்கு சிறப்பு தான்

Sani Peyarchi 2022: ஒவ்வொரு ராசி மீதும்  சனி பகவானின் பார்வை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது மிதுனம், துலாம், தனுசு ராசிகாரர்கள் நிம்மதியடைவார்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 6, 2022, 02:10 PM IST
சனீஸ்வரர் தொந்தரவு இல்ல! இனி இந்த 3 ராசிகளுக்கு சிறப்பு தான் title=

Shani Gochar: சனி பகவான் நீதிமான் என்று நம்பப்படுகிறார். மனிதர்களின் நன்மை தீமைக்கு ஏற்றாற்போல தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக வழங்கும் சனீஸ்வரர் ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் ராசி மாற உள்ளார். சனிஸ்வரரின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படவிருக்கிறது.

கும்ப ராசியில் மாறும் சனீஸ்வரர்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிஸ்வரருக்கு மட்டுமே உண்டான ஒரு சிறப்பு பரவலாக நம்பப்படுகிறது. சனி பகவான் இருக்கும் வீடு, அதற்கு முன்னும் பின்னும் இருக்கும் இரு ராசிகளின் வீடுகள் என மொத்தம் மூன்று ராசிகளைச் சேர்ந்தவர்களின் மீது அவரது பார்வை இருக்கும்.

இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாறுவதால், சனீஸ்வரரின் தாக்கம் ஒரு ராசிக்காரருக்கு ஏழரை ஆண்டுகள் இருக்கும். இந்த ஏப்ரல் மாதம் மாறும் சனியின் பெயர்ச்சியால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிக்கி சின்னாபின்னமான சில ராசிகள் சற்று பெருமூச்சு விடலாம்.

நிம்மதி கிடைக்கும் என்று சொல்வதைவிட, சிக்கலை உருவாக்கிய சனி பகவானே, இந்த ராசியினருக்கு நன்மைகளையும் செய்துவிட்டு செல்வார். சனியின் ராசி மாற்றம் (Shani Rashi Parivartan 2022), சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை கொடுக்க காத்திருக்கிறது. சனீஸ்வரரின் கருணையைப் பெறப்போகும் ராசிகள் இவை தான்...

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பண மழை பெழியும்

3 ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள்
ஜோதிடத்தின் படி, இந்த நேரத்தில் மிதுனம், மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. 29 ஏப்ரல் 2022 அன்று, சனி தேவன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

சனிபகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள்.

மிதுனம்: கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போதே மிதுன ராசிக்காரர்கள் சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடுவார்கள். ஏழரை நாட்டானின் பலன் முடிந்தவுடன், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும்.

lifestyle

துலாம்: ஏப்ரல் 29-ம் தேதி சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு துலாம் ராசியில் இருந்து சனி விலகிவிடுகிறார். அதன் பிறகு இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான காலம் வரும்.

வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் படிப்படியாக நீங்கும். பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். அதுமட்டுமின்றி உடல் நலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இது தவிர, சட்டப் பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை பெறலாம்.

தனுசு: தற்போது தனுசு ராசிக்கு துன்பத்தை கொடுக்கும் சனீஸ்வரர், ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் ராசி மாறியவுடன், நிம்மதியடைவார்கள். வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார முன்னேற்றத்துடன் கௌரவமும் கூடும். தொழில்-வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஒளி வீசும், மகிழ்ச்சி பொங்கும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News