ரத்த காட்டேரியாய் மாறிய தோனியின் மனைவி.... சாக்‌ஷி செய்த கொடூர செயல்!

வைரலாகும் தூங்கி கொண்டிருந்த தோனியின் கால்களை கடிக்கும் சாக்‌ஷியின் புகைப்படம்!!

Updated: Apr 19, 2020, 08:29 PM IST
ரத்த காட்டேரியாய் மாறிய தோனியின் மனைவி.... சாக்‌ஷி செய்த கொடூர செயல்!

விரலாகும் தூங்கி கொண்டிருந்த தோனியின் கால்களை கடிக்கும் சாக்‌ஷியின் புகைப்படம்!!

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும்  இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே  திங்களின் நேரத்தை களித்து வருக்கின்றனர். இந்நிலையில், இந்த விளையாட்டுப் பிரமுகர்களில் பெரும்பாலோர் வீட்டு வேலைகளைச் செய்வதற்கோ அல்லது சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதற்கோ தங்களைத் தாங்களே பிஸியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் MS.தோனி தனது நேரத்தை கடக்க சரியான வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. முன்னாள் இந்திய கேப்டன், மனைவி சாக்ஷி தோனி பகிர்ந்த படத்தில், எதையாவது பார்த்திருக்கலாம், ஒருவேளை நெட்ஃபிக்ஸ் தொடர், அல்லது அவரது ஐபாடில் PUBG கூட விளையாடலாம்.

மஹி ஐபாடில் எதைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் இருப்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. ஏனெனில், அவர் தனது மனைவி சாக்ஷிக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை, அவர் தனது கவனத்தை ஈர்க்க கால்களைக் கடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். "நீங்கள் #mrsweetie-லிருந்து கவனத்தை ஈர்க்கும் நேரம் இதுதான்!" என சாக்ஷி அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். அதில், தோனி படுக்கையில், தனது மார்புப்பகுதியில் ஒரு தலையணையை வைத்து அதற்க்கு மேல் ஒரு iPad-யை வைத்து அதில் எதையோ கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி சாக்‌ஷி, தோனியின் கால்களை தனது மடியில் வைத்தவாறு. அவரது கால்விரல்களை படிப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Times when you crave attention from #mrsweetie !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா விடுமுறை முடிந்து மீண்டும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி கோப்பையை பெற்று தரவேண்டும் என்பதே அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரசிகர்களின் விருப்பத்தை தல தோனி விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது