PM Kisan: 12வது தவணை எப்போது வரும்? அரசு செய்த முக்கிய மாற்றம்

PM Kisan Latest Update: அனைத்து விவசாயிகளுக்கும் eKYC-ஐ முடிப்பதற்கான காலக்கெடு 31 ஜூலை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2022, 03:44 PM IST
  • மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இரண்டாயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
  • பட்டியலில் உள்ள பெயரை இப்படி பார்க்கவும்
PM Kisan: 12வது தவணை எப்போது வரும்? அரசு செய்த முக்கிய மாற்றம்  title=

நாட்டின் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 12வது தவணைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் 12வது தவணை கணக்கில் வருவதற்கு முன்பே அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு இ-கேஒய்சி காலக்கெடுவை மே 31-லிருந்து ஜூலை 31 வரை நீடித்துள்ளது. சரியான நேரத்தில் அதைச் செய்யவில்லை என்றால், பணம் உங்கள் கணக்குக்கு வராமல் போகலாம்.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இரண்டாயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதாவது, மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்குகிறது. நிதி ரீதியாக நலிவடைந்த விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் தொகை வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் அடுத்த தவணை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. ஆனால் சிலருக்கு அடுத்த தவணை வராமல் போக வாய்ப்பு உள்ளது. உண்மையில், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள பயனாளிகள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும். 

மேலும் படிக்க | சூரிய எரிப்பினால் இன்று ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்

பட்டியலில் உள்ள பெயரை இப்படி பார்க்கவும்
இந்த நிலையில் பட்டியலில் உள்ள உங்கள் பெயர்களைச் சரிபார்க்க, பிரதம மந்திரி கிசான் யோஜனா மூலம் பயன்பெறும் விவசாயிகள் முதலில் பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும். இங்கே விவசாயிகள் கார்னர் என்ற விருப்பம் தோன்றும். அதன் பிறகு பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தில் புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும். அதன் பிறகு கேட் அறிக்கைக்குச் செல்லவும். இங்கே நீங்கள் அனைத்து விவசாயிகளின் பட்டியலைப் பெறுவீர்கள். இதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.

பிரதான் மந்திரி​ கிசான் திட்டத்தின் ஆன்லைனில் புதுப்பிக்கவும்
* பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* வலது பக்கத்தில் கிடைக்கும் இ-கேஒய்சி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* இப்போது ஓடிபி பெறவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பெறப்பட்ட ஓடிபி ஐ உள்ளிடவும். இதன் மூலம் கேஒய்சி புதுப்பிக்கப்படும்.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News