Rasipalan ஆகஸ்ட் 05 2021: இன்றைய ராசிபலன்: முயற்சிகள் ஈடேறும் நாள் இது!

கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை சோதிடம். இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 5, 2021, 05:43 AM IST
Rasipalan ஆகஸ்ட் 05 2021: இன்றைய ராசிபலன்: முயற்சிகள் ஈடேறும் நாள் இது!

புதுடெல்லி: இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே... 

மேஷம்: சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் மற்றும் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்: நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். இழுபறியாக இருந்துவந்த நல்ல செயல்களை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

மிதுனம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தன, தான்ய விருத்தி உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.

கடகம்: நீர்நிலைகள் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மூலிகை மற்றும் மருத்துவம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். தொழில் திறமைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். மனதில் தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வாசனை திரவியங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு மேம்படும்.

Also Read | Tamil Panchangam: இன்றைய பஞ்சாங்கம் ஜூலை 17, 2021

சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான வியூகங்கள் மனதில் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

கன்னி: பொருளாதார முன்னேற்றம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வாதத்திறமைகளின் மூலம் இழுபறியான காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவிகளின் மூலம் லாபம் மேம்படும். மனதில் நிலையான சிந்தனையுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்: வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்: தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

Also Read | முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்தி ஆலயங்கள், உங்களுக்கு அருகிலேயே

தனுசு: மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்களை செய்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பொது நிறுவனம் மற்றும் சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

மகரம்: கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.

கும்பம்: நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வித்தைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் நேர்மையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும்.

மீனம்: குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும்.

Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News