தொடர்ந்து 3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்!

3 மாதங்களுக்கு பயன்படுத்தாவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா?.. உண்மை என்ன தெரியுமா?

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 09:36 AM IST
தொடர்ந்து 3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்! title=

ஒரு நபர் மூன்று மாதங்கள் வரை ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என வெளியான செய்தி போலியானது என்று PIB தெரிவித்துள்ளது. 

ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்க உங்கள் ரேஷன் கார்டுகளை (Ration card) நீங்கள் பயன்படுத்தாவிட்டால், மூன்று மாதங்களில் உங்கள் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு (Central government) அறிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே, ரேஷன் கார்டை ரத்து செய்வது குறித்து உங்களுக்கும் ஏதேனும் செய்தி வந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். 

இந்த வைரல் செய்தி குறித்து, PIB கூறியுள்ளதாவது, சில ஊடக அறிக்கைகளில், ரேஷன் மூன்று மாதங்களுக்கு எடுத்துக் கொள்ளாவிட்டால், ரேஷன் கார்டை (Ration card) ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. #PIBFactCheck: - இந்த கூற்று போலியானது. இதுபோன்ற எந்த வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கவில்லை" என PIB தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

PIB-யின் Fact Check படி, இந்த கூற்று முற்றிலும் போலியானது. இதுபோன்ற எந்த வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு ஒருபோதும் வெளியிடவில்லை. எனவே உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் செய்தி அல்லது தகவல் கிடைத்திருந்தால், அவற்றை நம்ப வேண்டாம். இந்த கூற்று போலியானது என்றும் ரேஷன் கார்டு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் PIB கூறியுள்ளது.

ALSO READ | உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கா?.. அப்போ உங்களுக்கு ₹.2500 பணம் கிடைக்கும்..!

அரசு PIB Fact Check என்ற சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், அரசு மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான செய்திகளின் உண்மை ஊடகங்களில் அறியப்படுகிறது. உங்களிடம் ஏதேனும் உண்மைக்கு புறம்பான செய்திகள் இருந்தால், அதை factcheck.pib.gov.in அல்லது வாட்ஸ்அப் எண் +918799711259 அல்லது மின்னஞ்சல்: pibfactcheck@gmail.com க்கு அனுப்பலாம். இது குறித்த கூடுதல் தகவல்கள் PIB வலைத்தளமான pib.gov.in இல் கிடைக்கின்றன.

ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம்

'ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' திட்டம் நாட்டின் பல மாநிலங்களில் பொருந்தும். இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒருவர் தனது ரேஷன் கார்டு மூலம் நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் PTS ரேஷன் கடை மூலம் ரேஷன் பெற முடியும். ஒன் ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் நாட்டின் 23 மாநிலங்களில் 67 கோடி மக்கள் பயனடைவார்கள். PTS திட்டத்தின் 83 சதவீத பயனாளிகள் இதில் சேர்க்கப்படுவார்கள்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News