அடேயப்பா....1 மணி நேரம் கட்டிப்பிடிக்க வெறும் ₹ 6 ஆயிரம் மட்டும்...

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்கள்.... 

Last Updated : Dec 10, 2018, 05:10 PM IST
அடேயப்பா....1 மணி நேரம் கட்டிப்பிடிக்க வெறும் ₹ 6 ஆயிரம் மட்டும்...  title=

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் இளம் பெண்கள்.... 

ஒரு மனிதன் தனது உணர்சிகளை பல்வேறு முறைகளில் வெளிப்படுத்துகின்றான். நமக்கு விண்ணை முட்டும் அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தாலும் சரி, தாங்க முடியாத துக்கத்தில் இருந்தாலும் சரி நமக்கு பிடித்தவர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் நாம் கட்டியணைத்து வெளிப்படுத்துவோம். இது அனைவரிடமும் இருக்கும் ஒரு இயல்பான பழக்கம். 

பெரும்பாலான மக்கள் நாம் மற்றவர்களை கட்டியனத்தால் அது கொலை குற்றத்திற்கு சமமாக பாவித்து நம்மை பார்ப்பார்கள். அது, அப்படி ஒன்றும் கொலை குற்றம் கிடையாது. நமது மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் இயல்பான வெளிப்பாடுதான் கட்டியணைத்தல்.  

ஒருவர் மன உளைச்சலில் இருக்கும் பொது நாம் அவரை கட்டியனைப்பதால் அவருக்குள் உள்ள மன உளைச்சல் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பும் அளவுக்கு கட்டியனைத்தளுக்கு சக்தி இருப்பதாக ஆய்வில் தகவல்கள் கூறியுள்ளது. இதை சிலர் தொழிலாகவும் செய்து வருகின்றனர். என்ன...? இதையுமா தொழிலாக செய்து வருகிறார்கள் என்று தானே கேர்கின்றீர்கள்?...ஆமாம். 

லண்டனை சேர்ந்த ராஸ்டி-ன் மனைவி 35 வயதான பெட்ரா சாஜ்பான் என்ற பெண் ஒருமணி நேரம் கட்டிப்பிடிக்க £70 பவுண்ட்ஸ் வரை வசூலிக்கிறார். அதுமட்டும் இல்லை, தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட திறமை வாய்ந்த கட்டிப்பிடி நிபுணர் எனவும், தனக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை என தெரிவித்துள்ளார். 

இது குறித்து பெட்ரா சாஜ்பான் கூறிய போது, நான் 2015 ஆம் ஆண்டில் தான் கட்டிப்பிடிப்பதற்கு எத்தகைய சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்தேன். எனக்கு பிடித்த நோயாளிகளில், நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் பல வருடங்களாக வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை நான் கட்டிபிடிக்கவா என கேட்டேன். அதற்கு அவர் சிறிது யோசித்துவிட்டு, மெதுவாக தலையை ஆட்டினார். மறுநாளும், அவர் என்னை பார்த்த உடன் மீண்டும் கட்டிபிடிக்கவா என கேட்டேன் அவரும் வேகமாக தலையை ஆட்டினார். 

இந்த முறை தினமும் தொடரும் போது அவருடைய உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டில் கட்டிப்பிடி வைத்தியம் பற்றிய ஒரு கட்டுரையை படித்தேன். அப்பொழுது தான் அதை ஒரு நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கு என்னுடைய கணவரும் முழு அனுமதி கொடுத்தார். ஒரு மணிநேரமாக கட்டிப்பிடிக்க 70 பவுண்ட்ஸ் என வசூலிக்க ஆரம்பித்தேன். இதில் எந்த பாலியல் உறவும் கிடையாது. இதன் மூலம், அதிக மனஉளைச்சலில் இருப்பவர்களுக்கு ஒரு மனஅமைதி கிடைக்கிறது. முடி உதிர்தல், பேசும் திறமை உள்ளிட்டவை வளர்ச்சியடைகிறது.

ஜூன் மாதம் 2016 ஆம் ஆண்டு £150 பவுண்ட்ஸ் செலுத்தி ஒரு இணையதளத்தை துவங்கினேன். அதன் மூலம் உலகில் உள்ள பலரும் என்னை அணுக ஆரம்பித்தார்கள், அதில் முதலாவதாக 30 வயதுடைய ஒரு ஆண் தன்னுடைய நிறுவன வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றி கூறினார். நானும் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி முழுமையாக விளக்கி கூறிய பின், அவரை சந்திக்க ஓட்டலுக்கு சென்றேன். ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தது. ஒரு மணிநேரம் கட்டிபிடித்தபடியே படுக்கையில் இருந்தோம். அதன் பிறகு அந்த நபர் தன்னுடைய மனஅழுத்தம் அனைத்தும் சரியாகிவிட்டதாகவும், இதற்கு முன் இப்படி ஒன்றினை அறிந்ததில்லை எனவும் கூறினார் என தன்னுடைய வேலை பற்றி சாஜ்பான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

Trending News