ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும். இந்த ஒற்றைத் தலைவலியானது ஆண்களைவிட பெண்களிலேயே அதிகம் ஏற்படும்
ஒற்றைத் தலைவலியானது, 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன.
கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான ஒற்றைத் தலைவலிகான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன
ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள்:-
மனோவியல் காரணிகள் | உடலியல் காரணிகள் | உணவு வகைகள் | சூழலியற் காரணிகள் |
மனஅழுத்தம் கோபம் பதற்றம் அதிர்ச்சி |
களைப்பு தூக்கமின்மை அதிகநேர பயணம் மாதவிடாய் நிறுத்தம் |
உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல் உணவை குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல் உடலில் நீரினளவு குறைதல் மதுபானம் காப்பி, தேநீர் சாக்கலேட் |
பிரகாசமான ஒளி புகைத்தல் அதிக சத்தம் காலநிலை மாற்றங்கள் தூய காற்றின்மை |
ஒற்றைத் தலைவலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.
தலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும்.