அதிகபட்ச IMDb ரேட்டிங்கைப் பெற்றுள்ள 7 த்ரில்லர் படங்கள்!

நார்த் பை நார்த்வெஸ்ட் திரைப்படத்திற்கு IMDb 8.3 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2022, 04:35 PM IST
அதிகபட்ச IMDb ரேட்டிங்கைப் பெற்றுள்ள 7 த்ரில்லர் படங்கள்! title=

காதல், நகைச்சுவை அல்லது எதார்த்தமான திரைப்படங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு வகை மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து எடுக்கப்படும் திகில் நிறைந்த படங்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.  இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்ச IMDb ரேட்டிங்கைப் பெற்றுள்ள 7 த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் ஓடிடி இயங்குதளங்களில் உள்ளது.

மேலும் படிக்க | RRR படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

North By Northwest on Hungama:

இந்த படத்திற்கு IMDb 8.3 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  இது ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான அமெரிக்க படம்.  தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு நபரை பற்றி இந்தக் கதை கூறுகிறது, அரசாங்க இரகசியங்களைக் கடத்த நினைக்கும் ஒரு மர்ம அமைப்பின் உளவாளிகள் அவர்களது திட்டத்தை தடுக்க விடாமல் செய்வதற்காக ஒரு அப்பாவி மனிதனை அமெரிக்கா முழுவதும் துரத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.  ஈவா மேரி செயிண்ட், ஜெஸ்ஸி ராய்ஸ் லாண்டிஸ், கேரி கிராண்ட் மற்றும் ஜேம்ஸ் மேசன் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த பல திருப்பங்களுடன் வருகிறது.

north

The Bourne Ultimatum (அமேசான் ப்ரைம் வீடியோ ) :

இந்த படத்திற்கு IMDb 8 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  ராபர்ட் லுட்லமின் புகழ்பெற்ற போர்ன் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தி பார்ன் அல்டிமேட்டம் மூன்றாவது திரைப்படம் ஆகும்.  இது மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் போர்னைப் பற்றி கூறுகிறது.  போர்ன் ஒரு சிஐஏ ஏஜென்ட், அவரது கடந்த காலத்தின் மறக்கப்பட்ட சில விஷயங்களை தீர்க்க முயற்சித்து ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொள்கிறார்.

TheBourneUltimatum

Notorious (1946) (யூடியூப்) 

இந்த படத்திற்கு IMDb 8 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  இங்க்ரிட் பெர்க்மேன், கிளாட் ரெயின்ஸ் மற்றும் கேரி கிராண்ட் ஆகியோர் நடிப்பில் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய உளவு திரைப்படம்.  இது தென் அமெரிக்காவைச் சேர்ந்த நண்பர்களை உளவு பார்க்கசெல்லும் ஒரு பெண்ணை பற்றிய கதை.  இந்த திரைப்படம் கருப்பு மற்றும் வெள்ளை காலத்தைச் சேர்ந்தது என்றாலும், இது ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கினால்  எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

Notorious

Raazi (அமேசான் பிரைம் வீடியோ) :

இந்த படத்திற்கு IMDb 7.8 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  ஹரிந்தர் சிக்கா எழுதிய காலிங் செஹ்மத் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  அலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெற்ற ஒரு இளம் பெண்ணை அவரது தந்தை ஒரு பாகிஸ்தான் அதிகாரிக்கு திருமணம் செய்து வைப்பதை பற்றியும் 1971ல் நடந்த போர் பற்றியும் கூறுகிறது.

Raazi

Argo (யூடியூப்) :

இந்த படத்திற்கு IMDb 7.7 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  மூன்று ஆஸ்கார் விருதுகளுடன் ஆர்கோ சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இந்த படம் 1970களின் பிற்பகுதியில் ஈரானியப் போராளிகளிடம் இருந்து 6 அமெரிக்கர்கள் தப்பித்து கனடாவில் உள்ள தூதரகத்தில் தஞ்சம் புகுந்த கதை பற்றி கூறுகிறது.

Gold Finger (யூடியூப்) :  

இந்த படத்திற்கு IMDb 7.7 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  கோல்ட் ஃபிங்கர் ஜேம்ஸ் பாண்டின் மூன்றாவது திரைப்படமாகும், இன்றுவரை இந்த படம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இந்த திரைப்படத்தில், ஜேம்ஸ் பாண்டாக ஜெர்ட் ஃபோர்ப் நடித்துள்ளார் ஆரிக் கோல்ட்ஃபிங்கர் தலைமையிலான தங்கம் கடத்தல்காரர்களின் குழுவை விசாரிப்பதை பற்றி இப்படம் கூறுகிறது.

GoldFinger

Madras Cafe (நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோ சினிமா) :

இந்த படத்திற்கு IMDb 7.7 மதிப்பீட்டை கொடுத்துள்ளது.  விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்ட இந்த படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமரச்செய்யும் அளவிற்கு சுவாரஸ்யத்தை தந்தது.  இந்த திரைப்படம் ஜான் ஆபிரகாம் தலைமையிலான மெட்ராஸ் கபே, இந்தியப் பிரதமருக்கு எதிரான சதி மற்றும் உள்நாட்டுப் போரில் இருந்து அவரைக் காப்பாற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரி பற்றிய கதையை இலங்கையில் பணியமர்த்தப்பட்டதைப் பற்றி கூறுகிறது.

மேலும் படிக்க | புஷ்பா-1ல் சமந்தா.. அப்போ புஷ்பா-2வில் இவரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News