கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் 10 கதாப்பாத்திரங்களில் நடித்த திரைப்படம் தசாவதாரம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் பல்ராம் நாயுடு எனும் பெயரில் சிபிஐ அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்தார். நகைச்சுவையுடன் கூடிய புத்திசாலியான பல்ராம் நாயுடு கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து 'சபாஷ் நாயுடு' எனும் பெயரில் முழு நீள காமெடி படத்தை இயக்க கமல்ஹாசன் திட்டமிட்டார்.
இதற்கான படப்பிடிப்பு 2016-ம் ஆண்டு தொடங்கியது. கமல்ஹாசன் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் ஆகியோர் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும், மகள் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக அப்பா கமலுடன் இணைந்து நடிப்பதை பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
இந்த படத்தின் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ராஜீவ் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமல்ஹாசனே படத்தை இயக்க முடிவு செய்தார். அமெரிக்காவில் 40 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனிடையே படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணா கும்மாடி விலகினார். இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் வீட்டின் படிக்கட்டுகளில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இவ்வாறு அடுத்தடுத்து தடங்கள் சம்பவங்கள் தொடர்ந்ததால் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு நின்றது. அதன்பிறகு 6 ஆண்டுகளாக இந்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த படத்தை தயாரித்து வந்த லைகா நிறுவனம் அதன்பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் - 2 படத்தை தொடங்கியது. பிறகு அந்த படமும் பாதியில் முடங்கியது.
மேலும் படிக்க | அவதூறு வழக்கில் வெற்றி: இந்திய உணவகத்தில் பிரம்மாண்ட விருந்து வைத்த ஜானி டெப்!
இந்த நிலையில் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள விக்ரம் படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் கமல் நடிப்பில் வெளியான படம் மெஹா ஹிட் ஆனதால் அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில் விக்ரம் வெற்றி குறித்து கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 'சபாஷ் நாயுடு' குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் காப்பிரைட் உரிமைகள் தன்னிடமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'சபாஷ் நாயுடு' எனவும், இந்தி மொழியில் 'சபாஷ் குண்டு' எனவும் பெயரிப்பட்ட இந்த திரைப்படம் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளதாக வெளியான தகவல் கமல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | விசாரணை கைதி விக்னேஷ் கொலை - சிறையில் உள்ள 5 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR