நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று: விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 11:40 AM IST
நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று: விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை title=

2019 ஆம் ஆண்டு உலகை பற்றிய கொரோனா தொற்று இன்னும் மக்களை விட்டபாடில்லை. உலக மக்களை பாடாய் படுத்தும் இந்த பெருந்தொற்று இதுவரையில் பல உயிர்களை பலிவாங்கிவிட்டது.

கொரோனா தொற்று இந்தியாவையும் உலுக்கிப்போட்டுள்ளது. பணக்காரர்கள், ஏழைகள் என அனைவரும் இதனால் தாக்கப்பட்டனர். பிரபலங்கள் சாமானியர்கள் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றாக பற்றிக்கொண்டது கொரோனா. 

கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்ட பிரபலங்களும் ஏராளம். அதில் தற்போது நடிகர் அர்ஜுனின் பெயரும் சேர்ந்துள்ளது. 

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் அர்ஜுன் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார். 

இது பற்றி பதிவிட்டுள்ள அவர், 

‘எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். தேவையான அனைத்து நெறிமுறைகளௌயும் பின்பற்றி வருகிறேன். 

என்னுடன் தொடர்பில் வந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். 

நான் நன்றாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசங்களை அணிய மறக்காதீர்கள்’ என்று எழுதியுள்ளார். 

ALSO READ | WHO: குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு; சோதனை விகிதங்களே Omicron வேரியண்ட்டுக்கு காரணமா?

தனக்கு தொற்று உறுதியானதை தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் (Actor Arjun) மற்றவர்களுக்கும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறை வழங்கியுள்ளார். அவரது பதிவுக்குப் பிறகு, பலர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

தனது படங்களில் அவர் ஏற்று நடித்த வித்தியாசமான, நாட்டுப்பற்று மிக்க கதாபாத்திரங்கள் காரணமாக நடிகர் அர்ஜுனுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் அளவு குறைந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில், சில நாட்களாக, ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில், மெல்ல மெல்ல தலை தூக்கும் ஓமிக்ரான் வகை மாறுபாட்டின் எண்ணிக்கையும் பீதியைக் கிளப்புகிறது. 

ALSO READ | ஆந்திரா, சண்டிகரில் நுழைந்தது ஓமிக்ரான் தொற்று, அதிகரிக்கும் எண்ணிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News