“ரியல் சூப்பர் ஸ்டார்” - போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி

Super star Rajnikanth : செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட போலீசாரை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 29, 2022, 06:50 PM IST
  • செஸ் ஒலிம்பியாட் விழாவில் பாதுகாப்பு வழங்கிய போலீசார்
  • வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
  • “ரியல் சூப்பர் ஸ்டார்” என போலீசாருக்கு வாழ்த்து
“ரியல் சூப்பர் ஸ்டார்” - போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி title=

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட்  போட்டியின் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர்  தலைமையிலான குழு, நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை அழைத்துச் சென்றனர். போக்குவரத்தை சீர்படுத்தி நடிகர் ரஜினிகாந்தை அழைத்துச் சென்ற அக்குழுவினர்,  அவர் அரங்கத்தில் தனது இருக்கையில் அமரும் வரை உடனிருந்து உதவினர். அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த், பாதுகாப்புக் குழுவில் இருந்த போலீசாரை தனது வீட்டிற்கு அழைத்து கவுரவித்தார்.

மேலும் படிக்க | ராகவா லாரன்ஸ் பாதையில் விஜய் சேதுபதி! கை கொடுக்குமா திகில்

Rajni wishes his escort police

 

Rajni wishes his escort police

“ரியல் சூப்பர் ஸ்டார்” என அனைத்து போலீசாரையும் நடிகர் ரஜினிகாந்த் வரவேற்றார். தனக்கு பாதுகாப்பு வழங்குவது போலீசாரின் பணி என கடந்துவிடாமல், வீட்டிற்கே அழைத்து பாராட்டியதற்காக, போலீசாரும் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Rajni wishes his escort police

 

Rajni wishes his escort police

 

மேலும் படிக்க | நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News