பாகுபலி 2: சென்னையில் காலை நிகழ்ச்சிகள் ரத்து!!

Last Updated : Apr 28, 2017, 11:41 AM IST
பாகுபலி 2: சென்னையில் காலை நிகழ்ச்சிகள் ரத்து!! title=

தமிழகத்தில் பாகுபலி–2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. 

தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி- 2 திரைப்படம் திரையிடப்பட்டது.

மறுபக்கம் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இணையத்தில் சட்டவிரோதமாக முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளத்தில் பாகுபலி - 2 திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டதற்கு இடையே, தமிழில் வெளியிடுவதில் பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையே ஏற்பட்டு இருந்த பிரச்னை முடிவுக்கு வந்து உள்ளது. இருதரப்பு இடையேயும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பாகுபலி- 2 திரைப்படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

Trending News