ரசிகர்களிடையே மிகந்த எதிர்பார்பை ஏற்படுத்திய பாகுபலி 2 முழுப்படமும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு விற்பனையானதும், அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை கொண்ட இந்திய திரைப்படமும் இது தான். டில்லியில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.2400 ஆகும்.
பல தடைகள், எதிர்ப்புக்களை தாண்டி இப்படம் இன்று இந்த படம் ரிலீசாகிறது. சென்னையில் பட தயாரிப்பாளர்கள் மற்றும் பட விநியோகஸ்தர்கள் இடையேயான பிரச்னை காரணமாக தமிழில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலை காட்சிகள் ரிலீஸ் செய்யப்படவில்லை. அதே சமயம் சென்னையில் தெலுங்கில் பாகுபலி 2 ரிலீசானது.
இதற்கிடையில் இணையதளங்களில் பாகுபலி 2 தமிழில் முழுப்படமும் வெளியாகி உள்ளது. சட்ட விரோதமாக முழுபடமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால் தியேட்டர்களில் தமிழில் பாகுபலி 2 ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.