Bollywood: நடிகர் அமீர்கான், மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்யும் பின்னணி என்ன?

அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகின்றன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 3, 2021, 01:07 PM IST
Bollywood:  நடிகர் அமீர்கான், மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்யும் பின்னணி என்ன? title=

பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

லகான், தாரே ஜமீன் பர், 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என உலகளவில் புகழ்பெற்ற பல படங்களில் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் ஆஸ்கர் விருது பெற்ற லால் சிங் சத்தா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அமீர்கான்-கிரண் ராவ் தம்பதிகள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்துவிட்டு கிரண் ராவை திருமணம் செய்துக் கொண்ட அமீர்கான் தற்போது இரண்டாவது திருமண பந்தத்தில் இருந்தும் விலகுகிறார்.

அமீர்-கிரண் தம்பதிகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இருவரும் மனமொத்து பிரிவதாக தெரிவித்துள்ளனர். “15 அழகான ஆண்டுகளில் பல சிறப்பான அனுபவங்கள், மகிழ்ச்சி மற்றும் சிரிப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டோம், எங்கள் உறவு நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பில் மட்டுமே வளர்ந்துள்ளது. இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறோம். இனி கணவன்-மனைவியாக அல்ல, ஆனால் ஒருவருக்கொருவர் நண்பர்களாக உறவு தொடரும்.”

aamrikhan

“நாங்கள் இருவரும் பிரிவதைப் பற்றி சில நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்து அதற்காக திட்டமிடத் தொடங்கினோம்.  இப்போது இந்த ஏற்பாட்டை முறைப்படுத்தும் ஒரு பகுதியாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்தாலும், வெவ்வேறு வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினராகவோ இருப்போம். எங்கள் மகன் ஆசாத்துக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாக இருப்போம். அவனை வளர்ப்பதில் இணைந்தே செயல்படுவோம். திரைப்படங்கள், பானி அறக்கட்டளை மற்றும் பிற திட்டங்களில் நாங்கள் தொடர்ந்து இணைந்துபணியாற்றுவோம் ” என்று அமீர்கானும் அவரது மனைவியும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
இரண்டாவது மனைவியாக கிரண் ராவை திருமணம் செய்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக விவாகரத்து பெறுகிறார். இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இருவரும் 2005, டிசம்பர் 28ஆம் நாளன்று கிரண் ராவை அமீர்கான் திருமணம் செய்து கொண்டனர். அமீர்கான் மற்றும் கிரண் ராவ் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.  

Also Read | 45 வயதிலும் செம ஹாட் என ரசிகர்கள் ஆரவாரம் - பிகினி போட்டோவை ரீலிஸ் செய்த நடிகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News