ராக்கெட்ரி - நம்பி நாராயணனாக மாறிய மாதவன்... வைரலாகும் வீடியோ

ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக கெட்டப்பிற்காக மாதவன் மேக்கப் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 02:57 PM IST
  • ஜூலை 1ஆம் தேதி ராக்கெட்ரி படம் வெளியாகிறது
  • நம்பி நாராயணனாக மாதவன் நடித்திருக்கிறார்
 ராக்கெட்ரி - நம்பி நாராயணனாக மாறிய மாதவன்... வைரலாகும் வீடியோ title=

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கைதாகி பிறகு விடுதலையானார். மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நம்பியின் வாழ்க்கையையும், அவர் அனுபவித்த துன்பத்தையும், தான் ஒரு நிரபராதி என்பதை அவரு இச்சமூகத்துக்கு உணர்த்தியதையும் தழுவி ராகெட்ரி - நம்பி எஃபெகட் என்ற படம் உருவாகியுள்ளது.

நடிகர் மாதவன் நடித்திருக்கும் இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். ஜூலை 1ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

Rocketry

இப்படத்தின் தமிழ் பதிப்பில் சூர்யாவும், இந்தி பதிப்பில் ஷாருக்கானும் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கின்றனர். இன்னும் சில நாள்களில் படம் வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் ராகெட்ரி படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரமாக அவர் மாறுவதற்கு பல சிரமங்களை சந்தித்திருக்கிறார்.தற்போது அவர் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவும், படத்தின் மேக்கிங் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும் வீடியோவை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். வீடியோவைப் பார்த்த பலரும் அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

 

முன்னதாக, சென்னையில் மாதவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பஞ்சாங்கத்தில் உள்ள செலஸ்டியல் மேப்பை பார்த்துதான் இஸ்ரோவிலிருந்து 2014ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு குறைந்த செலவில், துல்லியமாக செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது” என்றார்.

அவரது இந்தப் பேச்சு கடுமையான ட்ரோல்களைச் சந்தித்தது. வாட்ஸ் அப்பில் வரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை பார்த்து மேடையில் மாதவன் பேசுகிறார் என பலரும் விமர்சித்தனர்.

 

இதனையடுத்து மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில்,   “அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இந்த விமர்சனங்களுக்கு தகுதியானவன். எனது அறியாமையை தெரிந்துகொண்டேன். 

மேலும் படிக்க | ரசிகர்களுக்கு சர்பிரைஸ்! 'வாரிசு' படத்தில் ரீமிக்ஸ் ஆகும் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்!

எனினும் உண்மையில் வெறும் 2 இஞின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டதை இந்த விமர்சனங்கள் எல்லாம் மாற்றிவிடாது” என விளக்கமளித்திருந்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News