Happy Birthday Santhanam: கவுண்டர் கிங் சந்தானத்தின் பிறந்தநாள் இன்று

Actor Santhanam Birthday: தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சந்தானம், படிப்படியாக முன்னேறி வெள்ளித் திரையிலும் தனது முத்திரையை பதித்தார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 21, 2023, 03:07 PM IST
  • சின்னத்திரையில் இவரது நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட நடிகர் சிலம்பரசன் தனது மன்மதன் படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார்.
  • முதல் படத்திலேயே சந்தானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
  • அதன் பின் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
Happy Birthday Santhanam: கவுண்டர் கிங் சந்தானத்தின் பிறந்தநாள் இன்று title=

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு மிக முக்கிய இடம் உள்ளது. என். எஸ். கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என அனைத்து காலங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சந்தானத்துக்கும் முக்கிய இடம் உள்ளது.

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சந்தானத்தின் பிறந்தநாள் இன்று. சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சந்தானம், படிப்படியாக முன்னேறி வெள்ளித் திரையிலும் தனது முத்திரையை பதித்தார். சின்னத்திரையிலேயே தனது இயல்பான நகைச்சுவை மற்றும் டைமிங் காமெடி காரணமாக பல ரசிகர்களை பெற்றார்.

கவுண்டர் மன்னன்
கவுண்டர் கொடுத்து காமெடி செய்வதில் சந்தானம் டாப் கிளாஸ். அவர் கொடுக்கும் கவுண்டர்கள் ரசிகர்களை வெகுவாக சிரிக்க வைத்தது. அவரது கவுண்டர்களும், அதன் டைமிங்கும் நன்றாக வொர்க் அவுட் ஆகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களை பெற்றன.

முதல் வாய்ப்பு
சின்னத்திரையில் இவரது நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட நடிகர் சிலம்பரசன் தனது மன்மதன் படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். முதல் படத்திலேயே சந்தானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

மேலும் படிக்க | சுந்தர் சி படத்தில் விஜய் சேதுபதி! கோலிவுட்டில் உருவாகும் புதிய கூட்டணி!

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல படங்களில் கதாநாயகனுடன் சேர்ந்து பயணிக்கும் கதாபாத்திரமாக அவர் நடித்துள்ளார். குறிப்பாக, 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் இவர் நகைச்சுவை கதாபாத்திரமாக நடித்தாலும், கதைக்களத்திற்கு முக்கிய பங்காற்றியிருப்பார்.

தனது சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டமாக, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் மூலம் கதாநாயகனாகனானார். இந்த படம் மூலம் அவர் ஒரு தயாரிப்பாளராகவும் மாறினார். அதன் பிறகு அவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு,, சக்க போடு போடு ராஜா , ஏ 1 , டிக்கிலோனா, குளு குளு ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படம், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

தனது சொந்த உழைப்பாலும் விடா முயற்சியாலும் சின்னத்திரை, வெள்ளித்திரை என தொடர்ந்து பல சாதனைகளை செய்துகொண்டிருக்கும் சந்தானம் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாக உள்ளார். அசத்தல் டயலாக், அதிரடி கவுண்டர், அசால்டான காமெடி, இயல்பான நடிப்பு என பல வகை திறமைகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் சந்தானத்துக்கு ஜீ தமிழ் நியூஸ் சார்பில் 'இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!

மேலும் படிக்க |  விக்ரம் பட பாணியில் தளபதி 67 அப்டேட்! எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News