இதயம் அப்டேட்: ஆதி செய்த விஷயம்.. சாரதாவிடம் நேருக்கு நேராக சவால் விட்ட பாரதி

Idhayam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 11, 2024, 12:00 PM IST
  • இதயம் : இன்றைய எபிசோட்.
  • சாரதாவிடம் சவால் விடும் பாரதி.
  • கன்ஃபார்ம் ஆயிடுச்சு: கலாய்க்கும் கவி.
இதயம் அப்டேட்: ஆதி செய்த விஷயம்.. சாரதாவிடம் நேருக்கு நேராக சவால் விட்ட பாரதி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.

இதயம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி ஸ்வேதாவிடம் 50 லட்சத்துக்கான கணக்கு கேட்க அவள் சாரதாவை கோர்த்து விட சாரதா ஆதியிடம் நான் இவளுக்கு கணக்கு சொல்லனுமா என்று கோபப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சாரதாவிடம் சவால் விடும் பாரதி

அதாவது மறுநாள் பாரதி ஆபீசுக்கு கிளம்பி வர சாரதா என்கிட்டயா கேக்குற என்று அவளை பிடித்து கேள்வி கேட்க பாரதி இந்த ஆபீஸ்ல நடக்கிற மர்மமான எல்லா விஷயத்துக்கும் நான் பதில் கண்டுபிடித்து அதை ஆதிக்கு தெரியப்படுத்துவேன் என்று சவால் விடுகிறாள். 

இதைத்தொடர்ந்து பாரதி ஆபீஸ் வந்துவிட ஆதி பாரதியை பார்ப்பதற்காக அவள் டேபிள் அருகே வந்து வந்து நிற்க பாரதியின் தோழி கவி பாஸ்ன்னு சைட் அடிக்கராறு போல அதனாலதான் அடிக்கடி இங்கு வந்துட்டு போறாரு என்று சொல்லி கலாய்க்க பாரதி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று சொல்ல கவி சாருக்கும் தான் கல்யாணம் ஆகிவிட்டது. இருந்தாலும் அவருக்கு உன்ன பிடிச்சிருக்கு போல என்று சொல்லிக் கலாய்க்கிறாள். 

கன்ஃபார்ம் ஆயிடுச்சு: கலாய்க்கும் கவி

பிறகு சரி ஒரு டெஸ்ட் வச்சுக்கலாம் நாம ஒரு சாக்லேட் கொண்டு போய் சார்கிட்ட கொடுக்கலாம் அவர் பாதி எடுத்துக்கிட்டு பாதி உனக்கு கொடுத்தார்னா காதல் இருக்குன்னு அர்த்தம் என்று சொல்லி ரூமுக்குள் சென்று பாரதியோட பொண்ணுக்கு பிறந்தநாள் என்று சாக்லேட்டை கொடுக்க ஆதி பாதி எடுத்துக்கொண்டு மீதியை பாரதிக்கு கொடுக்க கவி காதல் கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று கலாய்க்கிறாள்.

அதைத்தொடர்ந்து ஆதி லஞ்ச் டைம் ஆனதும் வெளியே வந்து பாரதியிடம் இன்னைக்கு என்ன லன்ச் கொண்டு வந்திருக்கீங்க என்று கேட்க அவள் லஞ்ச் கொண்டு வரல என்று சொல்ல ஆதி கொண்டு வரலையா என்று அங்கிருந்து நகர்ந்து செல்கிறான். கொஞ்ச நேரத்தில் பாஸ் எல்லாருக்கும் பிரியாணி வர வச்சிருக்காரு எல்லாரும் வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட பாத்தியா நீ சாப்பாடு கொண்டு வரலைன்னு தெரிஞ்சதும் எல்லாருக்கும் பிரியாணி சொல்லி இருக்காரு என்று மீண்டும் கவி பாரதியை கலாய்க்கிறாள். ஆதி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே பாரதியை சைட் அடிக்க கவி பாரதியை கலாய்த்தபடி இருக்கிறாள். 

மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?

இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஜொலிக்கும் பிரியா அட்லி: போட்டோஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News