விஜய் படத்தின் சாதனையை முறியடித்த 'விக்ரம்'!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jun 12, 2022, 12:15 PM IST
  • விக்ரம் படம் வசூல் சாதனை செய்து வருகிறது.
  • தமிழகத்தில் முந்தைய படங்களின் வசூலை முறியடித்து உள்ளது.
  • பாகுபலியின் வசூலை வரும் வாரத்தில் முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படத்தின் சாதனையை முறியடித்த 'விக்ரம்'! title=

சமூக ஊடகங்களில் தற்போது ட்ரெண்டாகி வருவது 'விக்ரம்' படம் பற்றிய செய்திகள் தான், ரசிகர்களை இந்த படம் பல மடங்கு திருப்தியடைய செய்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.  அந்த அளவுக்கு படம் பிரம்மாண்டமாக அமைந்திருப்பதோடு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகிவும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.  கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது, சில நிமிடங்களே சூர்யா திரையில் தோன்றினாலும் அவரது நடிப்பு வலுவாக அமைந்துள்ளது.  படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தும், வெளியான பின்னரும் விக்ரம் படம் குறித்த ஒவ்வொரு செய்திகளும் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க | தனுஷை தொடர்ந்து 21 வயது இளைஞராக நடிக்கும் சிம்பு!

தற்போது இப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெளியான 'பாகுபலி 2' படத்தின் பழைய சாதனையை முறியடித்துள்ளது.  பாகுபலி 2 படம் வெளியான சில வாரங்களிலேயே தமிழ்நாட்டில் அதிக வசூல் சாதனையை படைத்தது.  மொத்தமாக பாகுபலி 2 திரைப்படம் தமிழகத்தில் ரூ.155 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது, அதனைத்தொடர்ந்து பிகில் படம் ரூ.141 கோடி வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 'விக்ரம்' படம் ரூ.130 கோடி வசூல் செய்து  தமிழகத்திலேயே அதிகமாக வசூல் செய்த நான்காவது திரைப்படம் என்கிற பெருமையை பெற்றது.  தற்போது 'பாகுபலி-2' க்கு பிறகு தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 'விக்ரம்' படம் முன்னணி வகித்து சாதனை படைத்துள்ளது.  இதற்கு முன்பு தமிழகத்தில் விஜய் படங்களே அதிக வசூல் செய்து வந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் படம் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நெல்சன் இயக்கும் ரஜினி படம்- டைட்டில் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News