தமிழ்நாட்டில் ராக்கி பாயின் வசூல் வேட்டை

கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் 44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 22, 2022, 11:26 AM IST
  • தமிழ்நாட்டில் கேஜிஎஃப் 2 வசூல்
  • 44 கோடி ரூபாய் வசூலித்த ராக்கி பாய்
  • தொடர்ந்து கேஜிஎஃப் 2 படத்துக்கு கூடும் கூட்டம்
தமிழ்நாட்டில் ராக்கி பாயின் வசூல் வேட்டை title=

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. பான் இந்திய படமாக வெளியான கேஜிஎஃப் 2க்கு ரசிகர்கள் தங்களது வெறித்தனமான வரவேற்பை கொடுத்தனர். 

முக்கியமாக ராக்கி பாயின் எழுச்சி வேறு லெவலில் இருந்ததாகவும் தெரிவித்தனர். இன்றுவரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக கேஜிஎஃப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது.அதுமட்டுமின்றி கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான லீட் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

Yash

இப்படத்தின் வெற்றி மூலம் கதாநாயகன் யாஷுக்கும், இயக்குநர் பிரசாந்த் நீலுக்கும் பயங்கரமான டிமாண்ட் உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் அனைத்து மொழிகளிலும் படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | படத்துக்காக காத்திருக்கும் ஜாண்டி ரோட்ஸ்... நன்றி சொன்ன சூர்யா

கேஜிஎஃப் 2 உலகம் முழுவதும் இதுவரை 700 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே 700 கோடியை வசூலித்திருப்பதால் விரைவில் ராக்கி பாய் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இணையவிருக்கிறார்.

KGF

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கேஜிஎஃப் 2 படமானது முதல் வார முடிவில் 44 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த கன்னட திரைப்படம் என்ற சாதனையை கேஜிஎஃப் 2 நிகழ்த்தியிருக்கிறது.அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஏழு நாட்களில் 93 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்: மகளின் பெயர் இதுதான், பெயருக்கான காரணம் என்ன தெரியுமா

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News