ரஜினி, கமலை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்?... சூசகமாக கூறிய கமல் ஹாசன்

விக்ரம் சக்சஸ் மீட்டில் கமல் ஹாசன் அளித்த பதில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 9, 2022, 05:43 PM IST
  • ரஜினி, கமலை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்?
  • விக்ரம் பட சக்சஸ் மீட் இன்று நடந்தது
 ரஜினி, கமலை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்?... சூசகமாக கூறிய கமல் ஹாசன் title=

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களின் ஹிட்டுக்கு பிறகு கமலை வைத்து லேகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கினார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் ஒரு ரசிகனாக கமல் ஹாசனை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் எனவும், கமலின் முந்தைய படமான விக்ரமையும், தனது முந்தைய படமான கைதி படத்தையும் இந்த விக்ரமில் லாவகமாக இணைத்திருக்கிறார் எனவும் பலர் புகழ்ந்துவருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் என்ற நிலைக்கு இப்படம் மூலம் லோகேஷ் நகர்ந்திருக்கிறார் என திரையுலகினர் கூறுகின்றனர்.

Lokesh Kanagaraj

இதற்கிடையே படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் லோகேஷ் கனகராஜுக்கு காரும், அவரது உதவி இயக்குநர்களுக்கு பைக்கும், சிறப்பு தோற்றத்தில் நடித்து அதகளம் செய்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசளித்தார் கமல்.

இந்நிலையில் கமல் ஹாசனும், லோகேஷ் கனகராஜும் விக்ரம் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கமல் ஹாசனிடம், ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.

Lokesh, Kamal

அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், “ஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று பேரும் கலந்து பேசிய பின்னரே உங்களிடம் கூற முடியும். ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்” என கூறினார்.

மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!

இதனால் ரஜினியையும், கமலையும் வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் லோகேஷிடம் நெறியாளர், ரஜினி படங்களில் ஏதேனும் ஒரு படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவது என்றால் எதை இயக்குவீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

Lokesh Kanagaraj

இதற்கு பதிலளித்த லோகேஷ், கண்டிப்பாக தளபதிதான். ஏனென்றால் சூர்யா இன்னமும் உயிருடன் இருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார். எனவே ரஜினியின் படத்தை இயக்குவதில் லோகேஷ் ஆர்வமாகவே இருக்கிறார்.  அதனால் ரஜினி, கமலை வைத்து லோகேஷ் படம் இயக்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | ஒரு கணம் ஒருபோதும் பிரியக்கூடாதே என் உயிரே.... திருமண கோலத்தில் நயன் - விக்னேஷ் சிவன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News