இத்தனை ஆண்டுகளில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் நவரச நாயகன்?

'இந்தியன்-2' படத்தின் இடைநின்ற பணிகள் மீண்டும் செப்டம்பர்-13ம் தேதியிலிருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2022, 09:38 AM IST
  • இந்தியன் 2 படம் விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்த படத்தில் கார்த்திக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
  • காஜல் அகர்வால் தான் இந்த படத்தில் நடிப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இத்தனை ஆண்டுகளில் கமல்ஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் நவரச நாயகன்? title=

80கள் மற்றும் 90களில் அதிக ரசிகர்கள் பட்டாளத்துடன் வெற்றிநாயகனாக உச்சத்தில் இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக்.  இன்றுவரை தமிழ் சினிமாவில் பலராலும் விரும்பப்படும் நடிகர்களில் இவரும் ஒருவர், இவரது படங்கள் அனைத்தும் சலிப்பை ஏற்படுத்தாமல் சிறந்த பொழுதுபோக்காக அமைந்திருக்கும்.  இவர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களான சிவாஜி கணேசன், பிரபு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், சரத்குமார், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  மேலும் சமீபத்தில் தனுஷுடன் இணைந்து அனேகன் படத்திலும் நடித்திருந்தார்.  இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், ஒருதடவை கூட உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை.

உலகநாயகனையும், நவரச நாயகனையும் திரையில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர், ஆனால் அது ஒரு தடவை கூட நடக்கவில்லை.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, கமல்ஹாசனுடன் இணைந்து கார்த்திக் நடிக்கப்போகிறாராம்.  அதுவும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன்-2' படத்தின் கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  'இந்தியன்-2' படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான், தற்போது கார்த்திக் நடிக்கப்போவதாக சில செய்திகள் கூறுகிறது.  மேலும் 1996ல் வெளியான இந்தியன் படத்தில் நடித்திருந்த நெடுமுடி வேணு இறந்துவிட்டதால் அவரது கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரத்தை நடிக்கவைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

karthik

மேலும் படிக்க | விருமன் மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியா? கிளம்பும் புதிய சர்ச்சை!

மேலும் கல்யாணம் மற்றும் குழந்தை பிறப்பு காரணமாக 'இந்தியன்-2' படத்திலிருந்து விலகியிருந்த நடிகை காஜல் மீண்டும் படத்தில் இணையவுள்ளார்.  இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகளை செப்டம்பர்-13ம் தேதியிலிருந்து தொடங்கலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்க், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, மனோபாலா, சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் படிக்க | இன்று சென்னை வரும் தோனி! எதற்காக தெரியுமா?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News