S. A. Chandrasekhar: “விஜய்யை நடிக்க வைக்க பாரதிராஜா மறுத்துவிட்டார்..” எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது, இயக்குநர் பாரதிராஜா அவரை நடிக்க வைக்க மறுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : May 8, 2023, 10:38 AM IST
  • விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின்போது அவரை நடிக்க வைக்க பாரதிராஜா மறுப்பு தெரிவித்தார்.
  • “விஜய், என்னால்தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறினார்”-எஸ்.ஏ.சந்திரசேகர்
  • தங்கர் பச்சான் போல தன்னால் நல்ல இயக்குநர் என்ற பெயரை வாங்க முடியவில்லை என எஸ்.ஏ.சந்திர சேகர் கூறியுள்ளார்.
S. A. Chandrasekhar: “விஜய்யை நடிக்க வைக்க பாரதிராஜா மறுத்துவிட்டார்..” எஸ்.ஏ.சந்திரசேகர் ஓபன் டாக்! title=

தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘அருவி’ புகழ் அதிதி பாலன், கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

இசை வெளயீட்டு விழா:

தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ் படங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்து வந்த மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் இப்படத்தின் மூலம் கம்-பேக் காெடுக்கிறார். இந்த படத்திற்கு, சினிமா ரசிகர்கள் மத்தியில் எக்கச்சகக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. நேற்று நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு, ஜி.வி.பிரகாஷ் குமார், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று பல முன்னணி இயக்குநர்கள் குறித்த ஒரு தகவலை மேடையில் பேசுகையில் பகிர்ந்து கொண்டார். 

மேலும் படிக்க | கங்குவா பட லுக்கில் சூர்யா- லைக்ஸ் அள்ளும் வைரல் ஃபோட்டோ!

“பெயரை சம்பாதிக்கவில்லை..”

நேற்றைய விழாவில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் முன்னணி இயக்குநர்கள் பலர் குறித்தும் பேசினார். அப்போது, தான் படங்கள் இயக்கி நிறைய பணம் சம்பாதித்து விட்டதாகவும், ஆனால் தங்கர் பச்சான் போல் நல்ல இயக்குநர் என்ற பெயரை தன்னால் சம்பாதிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தங்கர் பச்சான் பல சறுக்கல்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து நிற்பதாக அவர் கூறினார். 

“பாரதிராஜா மறுத்துவிட்டார்..”

கருமேகங்கள் கலைகின்றன படவிழாவில் தொடர்ந்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது அவரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் பாரதிராஜாவிடம் மகனின் ஆல்பத்தை காண்பித்ததாக கூறினார். ஆனால், பாரதிராஜாவோ “என்னிடம் ஏன் இதையெல்லாம் கொண்டு வந்த..”என்று தன்னிடம் கூறியதாக எஸ்.ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குநர்கள் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறினார். 
“என்னால்தான் விஜய் கமரிஷியல் ஹீரோவாக மாறினார்..”

விஜய்யை நடிக்க வைக்க பல இயக்குநர்கள் மறுப்பு தெரிவித்ததும் ஒரு வகையில் நல்லதுதான் என சந்திரசேகர் தெரிவித்தார். மேலும், என் கையில் வந்ததால்தான் இப்போது விஜய் கமர்ஷியல் ஹீரோவாக மாறினார் என்றும் கூறினார். ஏற்கனவே தந்தை-மகன் இடையே ஓயாத பஞ்சாயத்து இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.ஏ சந்திரசேகர் கேப்பில் கடா வெட்டுவது போல அவ்வப்போது விஜய் குறித்து இது போன்ற கருத்துகளை கூறுவது, எறியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல உள்ளதாக ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர். 

விஜய்யை வைத்து ஆதாயம் பார்க்கிறாரா எஸ்.ஏ?

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகன் தலையிடாத பல விஷயங்களில் அவரது பெயரை இழுத்துவிட்டு கடைசியில் சர்ச்சையில் சிக்குவதில் பெயர் போனவர். சில ஆண்டுகளுக்கு முன்னர், விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் எஸ்.ஏ சந்திரசேகர். ஆனால் அது உண்மையல்ல என உறுதியானது. இது போன்ற பல செயல்களில் அவர் ஈடுபட்டதால், விஜய்யின் பெயரை வைத்து எஸ்.ஏ ஆதாயம் பார்க்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மனங்களில் பல நாட்களாக உள்ளது. 

மேலும் படிக்க | மைனஸ் 15 டிகிரி குளிர்.. பிகினியில் நீரில் இறங்கிய நடிகை - உறைந்து போன ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News