பொங்கலுக்கு வெளியாகிறதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்?

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 06:24 PM IST
பொங்கலுக்கு வெளியாகிறதா சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்?  title=

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி தினத்தில் சூரரை போற்று திரைப்படம் OTT யில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.  அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.  இந்த படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.  தமிழகத்தில் நடந்த மிக முக்கியமான பிரச்சனைகளை பேசும் படமாக இந்த படம் தயாராகி வருகிறது.  மேலும் பல திரைப்படங்களுக்கு பிறகு தற்போது கிராமத்து கதைக்களத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

ALSO READ விரைவில் புதிய படத்தில் இணையும் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

பாண்டிராஜ் கடைசியாக இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ் போன்றோரும் நடிக்கின்றனர்.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்திருந்தது.  டப்பிங் பணிகளும் முழுவீச்சில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இன்னிலையில் நாளை மதியம் 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படத்தின் அப்டேட் வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  அனேகமாக படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கும் என்று அனைவராலும் கூறப்படுகிறது.  

 

எதற்கும் துணிந்தவன் படம் இந்த வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறை அல்லது அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.  இந்த இரண்டு தினங்களிலும் மேலும் பல பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.  குறிப்பாக பொங்கலன்று அஜித்தின் வலிமை படம் வெளிவர உள்ளது.  நாளை எந்த மாதிரியான அப்டேட் வர உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் தற்போது லிருந்து ஆர்வமாக உள்ளனர்.  

சமீபத்தில் OTTயில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், சர்ச்சையும் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.  இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ மீண்டும் ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News