Master திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வெளியானது...

நடிகர் விஜய் நடிப்பில் உறுவாகியுள்ள Master திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Jan 26, 2020, 05:19 PM IST
Master திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் வெளியானது... title=

நடிகர் விஜய் நடிப்பில் உறுவாகியுள்ள Master திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

"பிகில்" படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மூன்றாம் லுக் போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரும் ஆக்ரோசமாக காட்சியளித்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றும் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்பு கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கைதி" பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயுடன் இணைந்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா அர்ஜுன் தாஸ உட்பட பலர் நடித்து வருகிறார்கள். 

படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இருபது நாட்களும், டெல்லியில் சுமார் ஒரு மாதமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 30 நாட்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய இத்திரைப்படத்திற்கு சம்பவம் என பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Trending News