பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்!!

சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!  

Updated: May 6, 2018, 02:41 PM IST
பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்!!

பிரபல நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகு தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை மணந்த இவர் ஐதராபாத்தில் குடியேறி உள்ளார். 

நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிப்பதுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் நடிகை சமந்தா அவர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வை நடத்தி வருகிறார். 

இவர் நடிப்பில் உருவான 'நடிகையர் திலகம்' திரைப்படம் தற்போது திரைக்கு வரவிருக்கிறது. தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

முன்னதாக, இவர் நடிப்பில் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுதந்தது.

இந்நிலையில், சினிமா வாய்ப்பிற்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து இவர் கருத்து கூறும்போது.....!

திரையுலகில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கிறது. அதேசமயம் சினிமாவை எடுத்துக்கொண்டால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அந்த கறுப்பு ஆடுகளால் தான் பெண்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்கிறது என்றார்.

இந்த மாதிரி நபர்களை கடுமையாக தண்டித்து விட்டால் சினிமா அற்புதமான உலகமாகி விடும் என்றார்.