SeePic: சீமராஜா படத்திற்கு டப்பிங் பேசும் சமந்தா!

சீமராஜா திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 7, 2018, 04:31 PM IST
SeePic: சீமராஜா படத்திற்கு டப்பிங் பேசும் சமந்தா!

சீமராஜா திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கியதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. 

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கிவிட்டதாக படத்தின் நாயகி சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

"புயலுக்கும் முன் அமைதி; ஆண்டின் இரண்டாம் பகுதியில் கர்ஜிக்க வருகிறது சீமராஜா; படத்திற்கான டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டது" என அவர் குறிப்பிட்டுள்ளார்!

More Stories

Trending News