தாகத்தில் இருக்கும் நாகப்பாம்பு வீடியோ: கருணை என்பது அனைத்து ஜீவராசிகளிடமும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய பண்பாகும். குறிப்பாக, வாயில்லா ஜீவன்களிடம் கருணை காட்ட வேண்டியது மிக முக்கியம். அப்படிப்பட்ட கருணையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் ஒரு மனிதன் ஒரு ராஜநாகத்தை காப்பாற்றி அதற்கு தண்ணீர் கொடுப்பது காட்டப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலோர் நாகப்பாம்பின் பெயரைக் கேட்டால் பயந்து ஓடுவது வழக்கம். ஆனால், இந்த வீடியோவில் நாம் காணும் நபர் தனது உயிரைப் பணயம் வைத்து பாம்புக்கு உதவுகிறார்.
வலையில் வசமாக சிக்கிய ராஜநாகம்
சமூக வலைத்தளன்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் வலையில் சிக்கிய பாம்பு மீட்கப்பட்டதை காண முடிகின்றது. ஒடிசாவின் பத்ரக் பகுதியில், பெரிய விஷப்பாம்பான ராஜநாகம் ஒன்று சுமார் 6 நாட்களுக்கு மீன் வலையில் சிக்கி இருந்தது. உள்ளூர் மக்கள் பின்னர் அதை மீட்டனர். பாம்பிற்கு தாகம் எடுப்பதை கண்டறிந்த மக்கள் ஒரு பாட்டில் மூலம் பாம்புக்கு தண்ணீர் கொடுத்து பாம்பின் தாகத்தை தணித்தனர்.
பாம்பு கடுமையான தாகத்தில் இருந்துள்ளது. தனக்கு கொடுக்கப்பட தண்னீரை அது வேகமான குடிப்பதை பார்த்தாலே அதை புரிந்துகொள்ள முடிகின்றது. பாம்பு பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்து தனது தாகத்தை தணித்துக்கொள்ளும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் கடுமையாக வைரலாகி வருகிறது. மனதைத் தொடும் இந்த காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்த மக்கள், பாம்புக்கு உதவிய மனிதனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பாம்புன்னா என்ன: எனக்கு தேவை சாப்பாடு: வாயிலிருந்து இரையை பறிக்கும் கழுதைப்புலி
பாம்பு பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:
பாம்பை காப்பாற்றி காட்டில் விட்டனர்
வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், 'இந்த பாம்பை காப்பாற்றியதற்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!’ என்று எழுதியுள்ளார். மற்றொருவர் கமெண்ட் பகுதியில், 'பாம்புக்கு மிகவும் தாகமாக இருந்துள்ளது. மிர்சா சார் பாம்பின் தாகத்தை தணித்து அதை காப்பாற்றியுள்ளார். முழு குழுவிற்கும் நன்றி.’ என்று பாராட்டியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த மற்றொரு இணையவாசி, ‘அற்புதம். தன்னை காப்பாற்றி தண்ணீர் கொடுத்ததற்கு பாம்பு மிகவும் நன்றியுடன் இருந்தது.’ என்று எழுதியுள்ளார்.
இதற்கிடையில், இது போன்ற ஒரு விஷ உயிரினத்தை கையாள நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டும் என்பதையும், உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் அவற்றை அணுகுவது ஆபத்தை விளைவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிபுணத்துவம் இல்லாதவர்கள் அவற்றின் அருகில் செல்வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
யூடியூப்பில் 7 மில்லியன் முறை பார்க்கப்பட்டது இந்த வீடியோ
சுமார் 9 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில், வலையில் சிக்கிய பாம்பு தொடர்ந்து அவதிப்படுவதையும், அதனைக் காப்பாற்ற ஒரு பாம்பு நிபுணர் அங்கு செல்வதையும் காண முடிகின்றது. பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த வீடியோ இதுவரை சுமார் 70 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | குறட்டை விட்டு தூங்கும் டீச்சர், விசிறும் மாணவி: ஷாக் ஆன நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR