துடைப்பம், வாளி, ப்ரெஷ், ‘அது’....: கல்யாண கிஃப்ட் அலப்பறைகள், வேற லெவல் வைரல் வீடியோ

Funny Wedding Video: நீங்கள் திருமண ஜோடிகள் பெறும் பல வித பரிசுகளை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வைரல் வீடியோவில், இந்த ஜோடி பெறும் பரிசு மிக விசித்திரமானது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2023, 03:55 PM IST
  • இந்த வினோதமான திருமண வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
  • இது ட்விட்டரில் Briksha என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
துடைப்பம், வாளி, ப்ரெஷ், ‘அது’....: கல்யாண கிஃப்ட் அலப்பறைகள், வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 

அதே போல திருமணங்களில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் தோழர்கள் மற்றும் உறவினர்களின் கேலி கலாட்டாக்களும் மிக வேடிக்கையாக இருக்கும். இவர்கள் மணமக்களை கிண்டல் செய்ய ஒரு வாய்ப்பையும் விட்டு வைப்பதில்லை. இவை சில சமயங்களில் மணமக்களுக்கு பல தர்மசங்கடங்களையும் ஏற்படுத்துவதுண்டு. தற்போதும் மணமக்களின் ஒரு பரிதாபமான வீடியோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு அதிர்ச்சிதான் கிடைக்கும். 

இந்த திருமணத்தில் நடந்த ஒரு விஷயம் மணமக்களுக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்குமே இந்த திருமணத்தை மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றி விட்டது. இது மட்டுமல்லாமல், இதை இணையத்தில் பார்க்கும் இணையவாசிகளாலும் இதை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இதில் மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்கள் சிலர் மேடையிலேயே அவர்களுக்கு வழங்கும் பரிசுகள் தான் இந்த திருமணத்தையே வித்தியாசமான திருமணமாக மாற்றிவிட்டது. 

வீடியோவின் துவக்கத்தில் மணமேடையில் மணமகனும், மணமகளும் நின்றுகொண்டிருப்பதை காண முடிகின்றது. திருமணத்திற்கு வந்துள்ள விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு பரிசுகளை அளித்து வருகிறார்கள். அப்போது மணமக்களின் நண்பர்கள் பலர் பரிசு அளிக்க மேடைக்கு வருகிறார்கள். அப்போதுதான் அந்த வினோதமான விஷயம் நடக்கின்றது. 

மணமக்களின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு பரிசுகளை அளிக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் பரிசுகளை பார்த்து மணமக்களுக்கு ஒன்றாக ஆச்சரியமும் அதிசயமும் ஏற்படுகின்றது. நண்பர்கள் பரிசாக துடைப்பம், வாளி, டாய்லெட் பிரஷ், ஹார்பிக் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டு பொருட்களை கொடுக்கின்றனர். பரிசுகளைப் பார்த்ததும் மணமகளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதை பார்த்த பிறகு மணமகனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. மனமக்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள் கொடுத்த பரிசுகளை பார்த்து உறவினர்கள் மற்றும் பிற விருந்தாளிகளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மேலும் படிக்க | லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள.. சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கும் பாம்பு: வீடியோ வைரல்

திருமணத்தில் நண்பர்கள் அடித்த லூட்டியின் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது:

இந்த வினோதமான திருமண வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது ட்விட்டரில் Briksha என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘இப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தால் சிரிப்புக்கு குறைச்சல் இருக்காது’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘சிரித்து சிரித்து என் வயிறு வலிக்கிறது’ என மற்றொரு நண்பர் கூறியுள்ளார். ‘இது நல்ல ஐடியா’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அட... இது நல்லா இருக்கே.. இனி புது ஜோடிகளுக்கு ஷாப்பிங் செய்ய மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது’ என மற்றொருவர் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News