அழுகாதடா செல்லம்! குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் நாய்க்குட்டி!

வீட்டில் அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தையை நாய்க்குட்டியொன்று அருகில் சென்று சமாதானம் செய்யும் அற்புதமான காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Sep 5, 2022, 08:45 AM IST
  • அழுது அடம்பிடிக்கும் குழந்தை.
  • அருகில் அமர்ந்து சமாதான படுத்தும் நாய்க்குட்டி.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அழுகாதடா செல்லம்! குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் நாய்க்குட்டி! title=

பெரும்பாலான வீடுகளில் நாம் வளர்க்கக்கூடிய வளர்ப்பு பிராணிகள் தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகின்றது, அதனை நிரூபிக்கும் விதமாகவும் உள்ள பல காட்சிகளை அனுதினமும் நாம் இணையதளங்களில் கண்டு ரசித்து வருகிறோம்.  அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் அழுகும் குழந்தையை நாய்க்குட்டி ஒன்று சமாதானப்படுத்தி குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் காட்சி பலரையும் மெய்சிலிரிக்க செய்திருக்கிறது.  வீட்டில் வளர்க்கக்கூடிய பிராணிகளில் குறிப்பாக நாய் இனங்கள் அதன் உரிமையாளருக்கு நன்றியுடன் தான் இருக்கின்றது.  பூனைகள் கூட சில சமயம் சுயநலமாக நடந்துகொள்ளும் என்று சில ஆய்வுகள் கூறும் நிலையில், நாய்கள் என்றாலே நன்றியுள்ள பிராணிகள் என்று நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

நாய்க்குட்டியின் இந்த அற்புதமான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு குழந்தை அழுதுகொண்டே தவழ்ந்து வருகிறது, அந்த நேரத்தில் குழந்தை அழுவதை தாங்கிக்கொள்ள முடியாத நாய்க்குட்டி ஒன்று அந்த குழந்தையின் அருகிலேயே நடந்து வந்து குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்கிறது.  நாய்க்குட்டி சமாதானப்படுத்தியதும் குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்க தொடங்குகிறது, பின்னர் குழந்தையும் நாய்குட்டியும் ஒன்றாக அமர்ந்துகொண்டு ஏதோ ரகசியம் பேசுவது போல இருவரது தலையையும் ஒன்றாக வைத்துக்கொண்டு கைகளையும், கால்களையும் பிடித்துக்கொண்டு விளையாடுகின்றனர்.  அதன்பின்னர் குழந்தையின் மடியில் நாய்க்குட்டி படுப்பது போன்ற செய்து விளையாடுகிறது.

 

இந்த வீடியோ பலரையும் ரசிக்க செய்து இருக்கிறது, திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்திருக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை எம்பத்தி எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவிற்கு ஐயாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகின்றது.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News