102 GB இலவச டேட்டா- Jio Cricket Data திட்டம்; விலை ₹251 மட்டும்!

IPL திருவிழா தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ₹251-க்கு புதிய திட்டம் ஒன்றினை Reliance Jio அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : Apr 13, 2019, 01:05 PM IST
102 GB இலவச டேட்டா- Jio Cricket Data திட்டம்; விலை ₹251 மட்டும்! title=

IPL திருவிழா தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் இதனை கொண்டாடும் விதமாக ₹251-க்கு புதிய திட்டம் ஒன்றினை Reliance Jio அறிமுகம் செய்துள்ளது!

டெலிகாம் நிறுவனங்களில் வழங்கப்படும் சேவைகிளில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, தனது முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு சந்தர்பத்தையும் தவறவிடாமல் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் களைகட்டியுள்ள நிலையில் ₹251-க்கு 102 GB இலவச டேட்டா அளிக்கும் Jio Cricket Data திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் Jio வாடிக்கையாளர்கள் தினர் 2GB டேட்டா எனும் விதத்தில் 51 நாட்களுக்கு 102 GB இலவச டேட்டாக்களை பெறுவர். இந்த 2GB டேட்டாக்கள் முடிந்த பிறகும் 64Kbps வேகத்தில் பயனர்கள் தொடர்ந்து இலவசமாக டேட்டாக்களை பயன்படுத்தலாம். எனினும் இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் இலவச அழைப்பு மற்றும் இலவச குறுஞ்செய்தி போன்ற அம்சங்களை பெறமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Jio-வில் ₹251 திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், இதற்கு இணையாக இருக்கும் பிற திட்டங்கள் குறித்த தகவல்கள்...

--- ₹ 198 திட்டம்; 28 நாட்களுக்கு 2GB வீதம் 56GB மொபைல் டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்புகள், தினம் 100 குறுஞ்செய்திகள். இத்துடன் Jio செயலியின் அனைத்து அம்சங்களையும் பயனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

--- ₹ 398 திட்டம்; 70 நாட்களுக்கு 2GB வீதம் 140GB மொபைல் டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்புகள், தினம் 100 குறுஞ்செய்திகள். இத்துடன் Jio செயலியின் அனைத்து அம்சங்களையும் பயனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

--- ₹ 448 திட்டம்; 84 நாட்களுக்கு 2GB வீதம் 168GB மொபைல் டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்புகள், தினம் 100 குறுஞ்செய்திகள். இத்துடன் Jio செயலியின் அனைத்து அம்சங்களையும் பயனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

--- ₹ 498 திட்டம்; 91 நாட்களுக்கு 2GB வீதம் 182GB மொபைல் டேட்டா, வரம்பற்ற இலவச அழைப்புகள், தினம் 100 குறுஞ்செய்திகள். இத்துடன் Jio செயலியின் அனைத்து அம்சங்களையும் பயனர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Trending News