Watch Viral Video: எவரெஸ்ட் சிகரத்திலிருந்து உலகின் அற்புத தோற்றம்..!!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இமய மலையில் அமைந்துள்ள இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2021, 10:39 AM IST
Watch Viral Video: எவரெஸ்ட் சிகரத்திலிருந்து உலகின் அற்புத தோற்றம்..!! title=

புதுடெல்லி: உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் (Mt. Everest) நேபாளத்தில் அமைந்துள்ளது. இமய மலையில் அமைந்துள்ள இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவதும். அங்கிருந்து இருந்து உலகை பார்ப்பதும் பலருக்கு கனவாக இருந்தாலும். ஆனால் அங்கு செல்வது அனைவராலும் இயன்ற காரியமல்ல. அந்த பயணம் மிக மிக கடுமையானது. உலகின் மிக உயரமான மலைத்தொடரின் சிகரத்திற்கான பயணம் மிகவும் ஆபத்தானதும் கூட. ஆனால், அங்கு செல்லாமலேயே, அங்கிருது உல்கை காணும் வாய்ப்பை ஒருவர் வழங்கியுள்ளார்.

ஆம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் வசதியாக உட்கார்ந்து கொண்டே அதன் அற்புத காட்சியை அனுபவிக்கலாம்.

ஹொரைசன் ஹெல்த் & கல்வி அறக்கட்டளையின் (Horizon Health & Education Trust) இயக்குனரான டாக்டர் அஜயிதா இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு, “உலகின் உச்சியில் இருந்து ஒரு காட்சி. .....எவரெஸ்ட் சிகரம். ”

வீடியோவை இங்கே பாருங்கள்:

ட்ரெக்கிங் குழுவைச் சேர்ந்த ஒருவர் GoPro என்னும் கேமிரா மூலம் சுற்றுப்புற சூழ்நிலையை படம்பிடிப்பதை வீடியோ காட்டுகிறது. வீடியோ உங்களுக்கு மிகவும் சிறந்த அனுபவத்தை தருவது உறுதி.

ALSO READ | கழிப்பறையில் ‘திடீர்’ பிரசவம்; ‘உள்ளே’ விழுந்த சிசு இறந்த சோகம்..!!

எவரெஸ்ட் மலை சிகரத்தின் (Mt. Everest) இந்த மனதை மயக்கும் வீடியோ காட்சி மிகவும் வைரலாகியுள்ளது வீடியோவை இதுவரை 36,000 திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர். இந்த வீடியோ லைக்குகளையும் அள்ளியுள்ளது. நூற்றுக்கணக்கான பேர் கருத்து தெரிவித்தனர். இந்த காணொளி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், இதை பார்த்தவுடன் வாழ்நாளில் ஒரு முறை உலகின் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர். 

ALSO READ | Watch viral video: தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!!!

பொறுப்பு துறப்பு: வீடியோ ட்விட்டரில் ஒரு தனி நபரால் வெளியிடப்பட்டது. ஜீ நியூஸ் இந்த வீடியோவை உறுதிபடுத்தவில்லை

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News