அந்த ஒரு வார்த்தை சொல்லி நித்தியானந்தாவை கலாய்த்த அஷ்வின்...

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டையே உருவாக்கி உள்ள நித்யானந்தாவை, ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின்.

Updated: Dec 4, 2019, 07:37 PM IST
அந்த ஒரு வார்த்தை சொல்லி நித்தியானந்தாவை கலாய்த்த அஷ்வின்...

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டையே உருவாக்கி உள்ள நித்யானந்தாவை, ஒரே வார்த்தையில் கலாய்த்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின்.

தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தா. தற்போது  பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். நித்யானந்தரின் இந்த மடத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கிளைகள் உள்ளது. 

இந்நிலையில், தற்போது  நித்யானந்தா தனக்கென ஒரு புதிய நாட்டையே உருவாக்கி நிர்வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கைலாசா இந்து நாட்டின் மொத்த மக்கள் தொகை 10 கோடி பேர் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில்., பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் இந்த நாட்டிற்கு வர ‘விசா’ அவசியமா என கேட்டு கலாய்த்துள்ளார்.

இதுகுறித்து அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., ’கைலாசம் தீவுக்கு விசா பெறுவதற்கான நடைமுறை என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அஷ்வினின் கேள்வி இணையத்தில் வைரலாக, அவருக்கு பலரும், பதிலளித்து வருகின்றனர்.