ஆசனத்தில பல வகை இருக்கலாம்! ஆனா இப்படி ஒரு கால் ஆசனத்தை யாரும் பார்த்ததுண்டா? வீடியோ

Different Pose Animal Viral Video: ஜாலி மூடில்  குட்டியுடன் தூங்கும் அம்மா வீடியோ, பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி தைரியமாக குட்டியையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் விலங்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2023, 03:59 PM IST
  • ஓய்வெடுக்க வேற இடமே கிடைக்கலையா பங்கு?
  • எங்களை பொங்க வைக்கறியே செல்லம்!
  • ஜாலி மூடில் குட்டியுடன் தூங்கும் அம்மா வீடியோ
ஆசனத்தில பல வகை இருக்கலாம்! ஆனா இப்படி ஒரு கால் ஆசனத்தை யாரும் பார்த்ததுண்டா? வீடியோ title=

வீடியோ: இணையத்தில் பகிரப்படும் தகவல்கள் , செய்திகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பலதரப்பட்ட வழிகளிலும் நம்மை வந்து அடையும் எண்ணற்ற செய்திகள், நமக்கு பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கின்றன. பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல, நாம் என்றுமே நேரில் சென்று பார்க்க முடியாத அல்லது பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத சம்பவங்களின் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள உதவும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக வீடியோக்கள் மாறிவிட்டன.

அந்த வகையில், சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விலங்குகளின் வீடியோக்களை பலரும் ரசித்து மகிழ்கின்ரனர். வீடியோக்கள் மூலம் பகிரப்படும் செய்திகளும் நமக்கு பல செய்திகளை கொடுத்தால், அவற்றில் இருந்து நாம் ஆக்கப்பூர்வமான செய்திகளை கிரகித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்

ஆக்ரோஷமான விலங்குகளின் கோபமும் சீறலும் மட்டுமல்ல, புத்திசாலித்தனமான வீடியோக்களும் வைரலாகின்றன. கண நேரத்தில் எஸ்கேப் ஆகும் விலங்குகளின் விவேகத்தை மட்டுமல்ல, கண்ணிமைப்பதற்குள் சீறித் தாக்கி, எதிராளியை பீதியடைய வைக்கும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது. 

ஜாலியாய் மரத்தில் தொங்கும் விலங்கு வீடியோ 

 அந்த வகையில் நம்மையெல்லாம் டென்ஷனாக்கும் ஒரு விலங்கின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிறது. 

வைரல் வீடியோவில் ஒரு விலங்கு தனது குட்டியுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ஓய்வெடுப்பதெல்லாம் சரி தான். ஆனால், அந்த விலங்கு மரத்தின் மீது சாய்ந்து இருக்கவில்லை. தனது கால்களை மட்டும் நீட்டிக் கொண்டு, வானத்தை பார்த்தவாறு மல்லாந்து படுத்திருக்கிறது.

மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க

மல்லாந்து படுத்திருப்பது தரையில் என்றால் பரவாயில்லை. இது மரத்தில் என்பதால், அதிலும் பாதி மரத்தில் என்பதால் பார்ப்பவர்களுக்கு பீதியாகிறது.

ஆனால், தன் மீது நம்பிக்கை கொண்ட இந்த விலங்கு, தன்னுடைய குட்டியையும் மடியில் படுக்க வைத்துக் கொண்டு ஆலியாய் படுத்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது பயமாய் இருந்தாலும், விலங்குகளின் இயல்பு இது என்பதால் சமாதானமாக இருக்கிறது. ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழி மட்டும் மனதில் வந்து போகிறது.

இதுபோன்ற பல வித்தியாசமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. விலங்குகளில், முதலை, குரங்கு, நாய்க்குட்டி, பூனை, யானை, புலி என எந்த விலங்காக இருந்தாலும் அவற்றின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக ரசித்து பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உன்னை பிடிக்காம விடமாட்டேன்! கங்கணம் கட்டிக் கொண்டு துரத்தும் பென்குயின்! பல்பு கொடுக்கும் பறவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News