பார்க்கவே கூச்சமா இருக்கு.. நடுரோட்டில் பாம்புகளின் பயங்கர ரொமான்ஸ்: வீடியோ வைரல்

King Cobra: கிராமத்தின் மெயின் ரோட்டின் நடுவில் இரண்டு பாம்புகள் ரொமான்ஸ் செய்வதை காணொளியில் காணலாம், ஆனால் அப்போதுதான் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 16, 2023, 02:55 PM IST
  • ரொமான்ஸ் செய்யும் பாம்புகளின் வீடியோவை இங்கே காணுங்கள்.
  • காதலில் மூழ்கிய பாம்புகள்.
  • இன்றைய வைரல் வீடியோ.
பார்க்கவே கூச்சமா இருக்கு.. நடுரோட்டில் பாம்புகளின் பயங்கர ரொமான்ஸ்: வீடியோ வைரல் title=

ரொமான்ஸ் செய்யும் பாம்புகளின் வைரல் வீடியோ:இன்றைய பரபரப்பான உலகில், சமூக ஊடகங்கள் நம் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். 

இந்நிலையில் நீங்கள் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்தால், ஆபத்தான பாம்புகளின் வீடியோக்களை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் எப்போதாவது நீங்கள் இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்றோடு ரொமான்ஸ் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? அப்படியில்லையெனில் இங்கு இது போன்ற வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகின்றது. காதலில் மூழ்கியிருக்கும் அந்த பாம்புகளின் வீடியோ பார்ப்பதற்கே வியக்க வைக்கிறது. ஆனால் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்த அந்த பாம்புகளுக்கு இடையே ஏதோ நடக்கிறது. அப்போது கோபத்தில் சிவந்த அந்த பாம்புகள் எதிரே வந்தவர்களை தாக்க முயற்சித்தது.

மேலும் படிக்க | குட்டி குரங்குக்கு தாயான பூனையின் கியூட் வீடியோ வைரல்

காதலில் மூழ்கிய பாம்புகள்
பாம்புகள் ரொமான்ஸ் தொடர்பான சுமார் ஐந்து நிமிட வீடியோ Sun Videos என்ற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கிராமத்தின் பிரதான சாலையின் நடுவே பாம்புகள் ரொமான்ஸில் மூழ்கியிருப்பதை இந்த வீடியோவில் காணலாம். ரொமான்ஸ் செய்யும் போது இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவினர். முதலில் ஒரு பாம்பு தன் உடலை உயர்த்துகிறது, பின்னர் மற்றோரு பாம்பு காற்றில் தன்னைத் தூக்கி ரொமான்ஸ் செய்கிறது. வீடியோவில் இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கிறது.

தெருநாய்கள் தாக்கின
நாகப்பாம்பு ஜோடி காதலில் மூழ்கியிருந்ததைக் காணலாம், அப்போதுதான் தெருநாய்கள் அந்த பாம்புகளை நெருங்கி வந்து தாக்குகின்றன. இங்குள்ள ஆபத்தை கண்டு பாம்புகள் சிறிது தூரம் சென்று சாலையோர புதரை அடைந்தன. ஆபத்தை பொருட்படுத்தாமல், மீண்டும் அந்த பாம்புகள் காதலில் மூழ்கியதைக் காணலாம்.  தொடர்ந்து ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்த அந்த பாம்புகளை அங்கிருந்த மற்றொரு நபர் பைக்கில் வந்து சீண்ட நெருங்கினர். சிறிது நேரத்தில் மற்ற கிராம மக்களும் வந்தனர். இங்கு தங்களை சுற்றிவளைத்ததை பார்த்து அந்த பாம்புகள் ஆக்ரோஷம் அடைந்தனர்.

ரொமான்ஸ் செய்யும் பாம்புகளின் வீடியோவை இங்கே காணுங்கள்

இறுதியில் கடுப்பான அந்த பாம்புகள் நடுரோட்டில் பேட்டை விரித்து நின்றன. பின்னர் நேராக தாக்குதல் முறைக்கு சென்றது. எதிரில் யார் வந்தாலும் அவரை விடப் போவதில்லை என்பது போல் அட்டாக் செய்ய முயன்றது அந்த பாம்புகள். இருப்பினும், சிறிது நேரம் கழித்து இருவரும் காட்டை நோக்கி சென்று விட்டது. தற்போது இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர், மேலும் பலர் வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News