Hunter Vulture vs Snake: பாம்பின் குடலை உருவி அதை ரசித்து ருசிக்கும் கடல் கழுகு

Hunter Vulture vs Snake Video: இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம்.. அதிர்ச்சியூட்டும் விலங்குகளின் வேட்டை... அதில் இதுவரை பார்த்திராத கடல் கழுகின் பாம்பு வேட்டை இது.. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 23, 2022, 04:14 PM IST
  • பசித்தால் பத்தும் பறந்தும் போகலாம்
  • பறந்து வந்து தாக்கும் கழுகு
  • பாம்பின் குடலை உரிக்கும் கடல் கழுகு
Hunter Vulture vs Snake: பாம்பின் குடலை உருவி அதை ரசித்து ருசிக்கும் கடல் கழுகு title=

விலங்குகள் எப்போதுமே பரவசம் தருபவை. அவற்றை நேரில் பார்க்க திகிலாக இருப்பதால் தான், வீடியோவாக பார்த்தால் ரசிக்கிறோம். 

அதனாலேயே அண்மைக் காலங்களாக விலங்குகளின் பல்வேறு வகையிலான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. இந்த வீடியோ வைரலானாலும், இளகிய மனமுடையவர்கள் பார்க்க வேண்டாம் என்ரு கேட்டுக் கொள்கிறோம்..

விலங்குகளின் வேட்டை அதிர்ச்சியூட்டுபவை. அதில் இதுவரை பார்த்திராத கடல் கழுகின் பாம்பு வேட்டை மட்டுமல்ல, அதை ரசித்து ருசித்து உண்ணும் கழுகின் வீடியோ இது.

மேலும் படிக்க | ராஜ நாகத்தை உயிருடன் விழுங்கிய பாம்பு: கேமராவில் கைதான திக் திக் நிமிடங்கள்

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டதில் இருந்து நெட்டிசன்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். பார்த்தவர் பகிர, அதை பார்த்த மற்றொருவர், பிறருக்கு பகிர என பகிர்தலும், பார்த்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த வைரல் வீடியோவில் கடல் கழுகு பாம்பை எப்படி வேட்டையாடுகிறது என்பது தெரியவில்லை. ஆனால், அதை நிதானமாக உண்பது தெரிகிறது. தனது இரையை ரசித்து ருசித்து உண்பதைப் பார்க்கும் நமக்கு பயமாக இருக்கிறது.

உணவாக மாறிய பாம்பின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தாலும், விலங்குகளின் வாழ்க்கையில் பிற உயிரினங்களை வேட்டையாடி வாழும் விலங்குகளும், ஊர்வன பறப்பனவும், மற்றொன்றிற்கு உணவாகிறது என்ற உண்மையும் புரிகிறது.

மேலும் படிக்க | சண்டைன்னு வந்துட்டா தராதரம் கிடையாது

பாம்பின் சீற்றத்தினாலும், விஷத்தினாலும் பல விலங்குகள் இறப்பதைப் போலவே, கழுகின் வேட்டைக்கு இந்த பாம்பு பலியாகியிருக்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். பல லைக்குகளும், பல்வேறு விதமான கமெண்டுகளும் இந்த வீடியோவிற்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | பாம்புகளின் மரம் பிடிக்கும் சண்டை: வைரலாகும் ஆதிக்கப் போர்

கழுகு, பாம்பின் குடலை உருவி உண்பதை பார்க்கும்போது பயமாக இருந்தாலும், அதையும் தாண்டி, கழுகு பாம்பின் தோலை சாப்பிடாது என்று தெரிகிறது. கடற்கரையில் காத்து வாங்க வந்த பாம்புக்கு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த கழுகு எமனாக மாறிவிட்டது.

மேலும் படிக்க | கம்பீரமாக நடக்கும் யானையை வியந்து பார்க்கும் மக்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News