மாஸ்டர் படம் குறித்து செம்ம தகவல் வெளியீடு; சந்தோஷத்தில் ரசிகர்கள்...

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. 

Last Updated : Nov 12, 2020, 02:09 PM IST
    1. விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
    2. மாஸ்டர் திரைப்படம் குறித்து அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.
    3. இன்று மாலை ஆறு மணிக்கு விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த முக்கியமான அப்டேட்
மாஸ்டர் படம் குறித்து செம்ம தகவல் வெளியீடு; சந்தோஷத்தில் ரசிகர்கள்... title=

விஜய்  (Vijayதற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் (Master). லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

“மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. 

 

ALSO READ | தளபதி விஜயின் master தீபாவளிக்கு ரிலீசாகுமா? பரபரப்பு

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் குறித்து அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு விஜய்யின் மாஸ்டர் படம் குறித்த முக்கியமான அப்டேட் வரவிருக்கிறது என தயாரிப்பு நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

 

 

இந்த புதிய அப்டேட் நிச்சயம் மாஸ்டர் படத்தின் டீசர் பற்றி தான் என விஜய் ரசிகர்கள் குதித்து வருகின்றனர். மேலும்  தீபாவளிக்கு, மாஸ்டர் படக்குழுவிடம் இருந்து ட்ரீட்டாக டீசர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ALSO READ | Master: தளபதி விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் வெளியீடு தேதி குறித்து படக்குழு விளக்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News