நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ? - தமிழிசை பதிலடி!!

அதிமுகவை பாஜக இயக்குவதால், தன்மானத்தைவிட்டு அக்கட்சியில் சேர விரும்பவில்லை என்று கூறிய தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தக்க பதிலடி!!

Last Updated : Jun 29, 2019, 02:34 PM IST
நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ? - தமிழிசை பதிலடி!! title=

அதிமுகவை பாஜக இயக்குவதால், தன்மானத்தைவிட்டு அக்கட்சியில் சேர விரும்பவில்லை என்று கூறிய தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தக்க பதிலடி!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் நேற்று DMK தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர், அதிமுகவை பாஜக இயக்குவதால், தன்மானத்தைவிட்டு நான் அதிமுகவில் சேர விரும்பவில்லை என்றும் தலைவர் ஸ்டாலினின் ஆளுமை தன்னை திமுகவில் இணைய அழைத்ததாகவும் கூறினார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்...செய்தி......நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ?அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்?ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.இதில் எங்கே பாஜக இயக்குகிறது?

அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்!ஆட்சி மாற்றம்வரும்! வரும்!என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா?பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்" என்று பதிவிட்டுள்ளார். 

 

Trending News