கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி!!

Ketu Gochar: கேதுவின் ராசி மாறுவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2023, 02:39 PM IST
  • கேதுவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
  • நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது திரும்ப கிடைக்கும்.
  • இந்த காலகட்டத்தில், உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. வேலை, வியாபாரத்தில் வெற்றி!! title=

கேது பெயர்ச்சி 2023: ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். இவை இரண்டும் எப்போதும் வக்ர இயக்கத்தில், அதாவது எதிர் திசையில்தான் நகரும். அதாவது இவை ராசியை மாற்றும் போது தற்போதைய ராசியில் இருந்து முந்தைய ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றன. 

தற்போது கேது துலாம் ராசியில் இருக்கிறார். அவர் அக்டோபர் மாதம் கன்னி ராசிக்கு மாறுகிறார். ஜாதகத்தில் கேது எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி கிரகத்துக்கு ஏற்றவாறு அவர் பலன்களைத் தருவதாக ஜோதிடம் கூறுகிறது.

சனி பகவானை போல கேது கிரமும் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் கிரகமாகும். நமது நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப அவர் நமக்கு பலன்களை அளிக்கிறார். கேதுவின் ராசி மாறுவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றத்தால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே காணலாம். 

ரிஷப ராசி:

கன்னி ராசியில் கேதுவின் பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அமோக வெற்றி கிடைக்கும். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பார். இந்த காலகட்டத்தில் நீங்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறலாம். இது தவிர, ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். மன அழுத்தமும் நீங்கும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும். பணம் ஈட்டுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

சிம்ம ராசி

கேதுவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தின் இரண்டாம் வீட்டில் கேதுவின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் தற்போது திரும்ப கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்களது அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உங்கள் உறவு மேம்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். உங்கள் கனிவான பேச்சால் மக்களைக் கவர்வீர்கள். இந்த காலத்தில் பணம் ஈட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மேலும் படிக்க | ராகு இந்த ராசிக்காரர்களிடம் கருணை காட்டுவதால் பூர்வீக வீடு செல்வத்தால் நிரம்பும்

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்களுக்கு கன்னி ராசியில் கேதுவின் சஞ்சாரம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். உங்கள் கர்ம வீட்டில் கேதுவின் சஞ்சாரம் நடக்கப் போகிறது. எனவே, நீங்கள் வணிகத்திலும் வேலையிலும் சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். இதுமட்டுமின்றி, உங்கள் தொழிலிலும் புதிய உயரங்களைத் தொடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான காலமாகவும் இது இருக்கும். இது தவிர, வியாபாரத்தில் உயரும் வாய்ப்புகளும் இப்போது உள்ளன. உங்கள் பணியிடத்தில் விரிவாக்கம் ஏற்படலாம். பணத்துக்கு பஞ்சம் இருக்காது. தந்தையின் ஆதரவு கிடைக்கும். இது தவிர உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவும் இப்போது கிடைக்கும். 

மகர ராசி

துலாம் ராசியில் கேதுவின் பிரவேசம், மகர ராசிக்காரர்களுக்கு அதிக பண பலன்களைத் தருகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரிய பதவிக்கான பொறுப்பைப் பெறலாம். இதுமட்டுமின்றி, இப்போது ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வணிக வகுப்பினருக்கும் இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிக லாபம் பெறுவீர்கள். இப்போது முதலீடு செய்வது உங்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்தில் புதன் பெயர்ச்சி... பணத்தில் மிதக்கப்போகும் இந்த 5 ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News