அடிச்சுது ஜாக்பாட்: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம், தலைவிதி மாறும்

Rahu Gochar: இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இவர்கள் பெரும் முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2023, 09:26 AM IST
  • ராகுவின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் உண்டாகும்.
  • திடீரென்று கிடைக்கும் பணம் பொருளாதார பலத்தை தரும்.
  • உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும்.
அடிச்சுது ஜாக்பாட்: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம், தலைவிதி மாறும் title=

ராகு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக ராகு கேதுவை பார்த்து மக்கள் அச்சப்படுவது உண்டு. ஆனால் அது தேவை இல்லை. மற்ற கிரகங்களை போல ராகுவும் கேதுவும் சுப மற்றும் அசுப பலன்கள் என இரண்டையும் அளிக்கின்றன. சனி பகவானுக்கு அடுத்தாக மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக ராகு உள்ளார். ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில், அதாவது தலைகீழ் இயக்கத்தில் பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் அசுப நிலையில் இருந்தால் அந்த நபர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவார். அவர் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். ராகு கொடூர குணம் கொண்ட கிரகம் என்பது உண்மைதான், ஆனால் ராகு சுப பலன்களை தருகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு சுப ஸ்தானத்தின் இருந்தால், அந்த நபரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது, அந்த நபருக்கு ராஜ வாழ்க்கை கிடைக்கும். 

ராகு மற்றும் கேது கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில் இயங்குகின்றன. இவை இரண்டும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். ராகுவின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமையும். இவர்கள் பெரும் முன்னேற்றம், மரியாதை மற்றும் செல்வத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுவார்கள்.

2023 ஆம் ஆண்டு ராகு பெயர்ச்சியால் சுப பலன்களை பெறவுள்ள ராசிகள்

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் அதிகப்படியான நற்பலன்களைத் தரப் போகிறது. இவர்கள் எல்லாத் துறைகளிலும் சுப பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும், உங்களின் நிதிப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். வெளியூர் பயணம் செல்லலாம். இந்த பயணங்களால் அனுகூலமான நற்பலன்கள் உருவாகும். பெரிய ஆசைகள் அனைத்தும்  நிறைவேறும். அரசியலில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறலாம்.

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி.. தீபாவளி முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

கன்னி ராசி: 

ராகுவின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன்கள் உண்டாகும். திடீரென்று கிடைக்கும் பணம் பொருளாதார பலத்தை தரும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். மக்களுடனான உறவுகள் மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வேலை நன்றாக நடக்கும். நீங்கள் கூட்டாண்மையில் வேலை செய்தால், சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். அயல்நாட்டு நிறுவனத்துடன் வியாபாரம் செய்வதால் அதிக லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும், உறவுகளும் மேம்படும். அரசியலில் புகழ் பெறுவீர்கள்.

விருச்சிக ராசி: 

விருச்சிக ராசியினருக்கு ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் ஆளுமை மேம்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்கள் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இருக்கும். விருச்சிக ராசி மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான விளைவுகள் கிடைக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று இந்த 3 ராசிகளுக்கு சாதகமான நாள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News