Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால் சில ராசிகளில் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும்.
கிரகங்களில் முக்கியமான கிரகமாக கருதப்படும் சுக்கிரன் ஜூன் பன்னிரெண்டாம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆனார். ஜூலை ஆறாம் தேதி வரை அவர் மிதுனத்திலேயே இருப்பார். இதன் பிறகு ஜூலை ஏழாம் தேதி அதிகாலை அவர் கடக ராசியில் பெயர்ச்சியாவார்.
சுக்கிரன் பெயர்ச்சி பெரும்பாலும் வாழ்க்கையில் ஆனந்தம், மகிழ்ச்சி, அன்பான திருமண வாழ்க்கை, குழந்தைகளின் நல்வாழ்வு, புகழ், பண வரவு ஆகியவற்றை கொண்டு வரும். ஆனால் சுக்ரனின் அசுப விளைவுகள் பண விரயம், சுகாதாரக் கேடு, அச்சம் ஆகிய அசுப விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகள் இந்த பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
கடகம் (Cancer)
மிதுன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். சவாலான சூழ்நிலைகளை கடக ராசி காரர்கள் சந்திக்கலாம். ஜூன் 12 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நேரம் சரி இல்லாமல் இருக்கலாம். உங்கள் சேமிப்பு விரயமாகலாம். பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இது மட்டுமின்றி கோபம் அதிகரிக்கலாம். மற்றவர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்து வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் (Scorpio)
சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக வருகின்றது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணவரவை சற்று நிதானமாக கவனித்து செயல்பட வேண்டும். தகாத முறையிலும், நீதிக்கு புறம்பான முறையிலும் பணம் ஈட்டுபவர்களுக்கு இந்த காலத்தில் கடினங்கள் ஏற்படலாம். பொறுமையை கடைப்பிடிப்பது மிக அவசியம். உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கக்கூடும். பணியிடத்தில் வெற்றி பெற நீங்கள் புதிய சவால்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் இந்த காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மகரம் (Capricorn)
சுக்ரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு பலவித சவால்களை கொண்டு வரும். பணியிடத்தில் நீங்கள் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் கருத்துக்களை தெளிவாக பதிவிடுங்கள். கொடுக்கல் வாங்கல்களை இந்த காலத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அப்படி செய்வதால் நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். புதிய வேலைகளை செய்யும் முன் அதைப் பற்றி நன்றாக புரிந்து கொள்வது நல்லது.
கும்பம் (Aquarius)
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பல நல்ல பலன்கள் அளித்தாலும் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் தாக்கம் உங்கள் உடல்நிலையில் நன்றாக தெரியும். உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சை பெறுவது நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ