சனி பகவானின் அருள் பிரகாசமாக கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!

ஜோதிட சாஸ்திரத்தில் நீதி கடவுளாக இருப்பவர் சனி பகவான். நல்லது மற்றும் கெட்டது என எதுவாக இருந்தாலும் சனி பகவானிடம் இருந்து இரட்டிப்பு அருள் கிடைக்கும். உங்களின் சிந்தனை செயல்களின் வெளிப்பாட்டில் இருந்தே சனி பகவானின் அருள் பார்வையும் கிடைக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2023, 09:53 AM IST
சனி பகவானின் அருள் பிரகாசமாக கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..! title=

சனி பகவானின் அருள்

ஜோதிட விதிப்படி கிரங்களில் நீதி கடவுளாக இருப்பவர் சனி பகவான். உண்மை நேர்மையை விரும்பு அவர், நல்லவர்கள் என நினைப்பவர்களுக்கு செல்வ செழிப்பை இரட்டிப்பாக அள்ளி கொடுப்பார். அவரின் தீய பார்வையில் சிக்கிவிட்டால், இந்த வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை கண்முன்னே காட்டிவிடுவார். இப்படி ஒரு வாழ்க்கை நாம் வாழ வேண்டுமா? என்றளவுக்கு உங்களுக்கான அனுபவத்தை கொடுத்துவிடுவார். ஆனால், அதன்பிறகு உங்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறிவிடும். நீங்களும் வாழ்க்கையை புரிந்து கொண்டு நடக்கத் தொடங்கிவிடுவீர்கள். 

மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு கெடுபிடி காலம், குழப்பங்கள் பெருகும்

சனி பகவானின் நேசத்தை பெறுவது எப்படி?

சனி பகவான் கறாராக இருப்பவர். நல்லதுக்கு நல்லது, கெட்டத்துக்கு கெட்டது என பலன்களை அளிக்ககூடியவர். மன்னிப்பை எதிர்பார்க்காமல் நீங்கள் உங்கள் வழியில் சென்றால் உங்களுக்கான பலன்கள் கிடைக்கும். நல்லது செய்யுங்கள், என்னிடம் வரவில்லை என்றாலும் உங்களுக்கான பலன்கள் உங்களுக்கு வந்தே தீரும். மனதில் நம்பிக்கையும், நேர்மையும் பயணிக்கும்போது உங்களுக்கு உற்ற துணையாக இருப்பார் சனி பகவான்.

சனி பகவானுக்கு பிடிக்காதவை

ஒருவரை தரக்குறைவாக நடத்துவது என்பது சனி பகவானுக்கு பிடிக்காது. நீங்கள் அனைவரையும் சரிசமமாக நடத்தினால் சனி பகவானின் அருள் பார்வையும் மகிழ்ச்சியாக உங்கள் மீது படும். எந்தவொரு செயலிலும் நேர்மையாக நடந்து கொள்ளாதவர்கள் சனியின் அருளைபெற முடியாது. உண்மை மறைப்பவர்கள், சூது உள்ளிட்ட விஷயங்களில் மூழ்கி இருப்பவர்கள் எல்லாம் சனியின் அருளை பெருவது கடினம். இதற்கு மாறாக நேர்மையாக இருப்பவர்கள் சனியின் அருளால் வளம் கொழிக்கலாம். அவர்களுக்கு எத்தகைய தடை வந்தாலும் சனி பகவான் விலக்கிக் கொடுப்பார்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023 - இந்த ராசிகளுக்கு அட்டகாசமான வெற்றி, பண வரவு: முழு ராசிபலன் இதோ

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2023: சனி மகாதிசை..19 ஆண்டுகள் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News