பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை 2024 இன்று (2024, ஜூலை 7) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ரதங்கள் ஜெகன்நாதர் கோவிலின் சிம்ம வாசல் முன் நிறுத்தப்பட்டு, குண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரதத்தின் வடத்தைப் பிடித்து இழுத்து வழிபாடு செய்கின்றனர்.
ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் இரண்டாம் நாளில் நடைப்பெறும். ஆஷாட சுக்ல துவிதியை முதல் தசமி திதி வரை ஜெகன்நாதர் மக்கள் நத்தியில் வாழ்கிறார் என்பது ஐதீகம். இந்த காலகட்டத்தில், ஜெகநாதர் தனது மூத்த சகோதரர் பலராம் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் தேரில் குண்டிச்சா கோயிலை நோக்கி செல்கிறார். இந்த பிரமாண்ட நிகழ்வு 10 நாட்கள் நடைபெறும். சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரகங்கள் (Planets) மற்றும் நட்சத்திரங்களின் நிலையை கணக்கில் கொண்டு, இந்த ஆண்டு இரண்டு நாள் யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இரண்டு நாள் யாத்திரை கடந்த 1971ம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜகந்நாதரின் தேர்
ஜகந்நாதரின் தேர் நந்திகோஷ் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தேரில் அசையும் கொடிக்கு திரிலோக்யமோகினி என்று பெயர். இந்த தேரில் 16 சக்கரங்கள் இருக்கும். இந்த தேர் 13.5 மீட்டர் உயரம் கொண்டது. குறிப்பாக இந்த தேரில் மஞ்சள் நிற துணி பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணுவின் வாகனமான கருடன் ரதத்தை பாதுகாக்கிறார்.
பலராமரின் தேர்
பலராமரின் தேர் தலத்வாஜ் என்று அழைக்கப்படுகிறது. தேரின் கொடி யுனானி என்று அழைக்கப்படுகிறது. தேர் இழுக்கப்படும் வடம் வாசுகி எனப்படும். 13.2 மீட்டர் உயரம் கொண்ட இந்த தேரில் 14 சக்கரங்கள் உள்ளன. இந்த தேரினை வாசுதேவர் மற்றும் தேரோட்டி மாதலி பாதுகாக்கிறார்.
சகோதரி சுபத்ராவின் தேர்
ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரையின் தேரின் பெயர் பத்மத்வாஜ். கருப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகள் இந்த தேரில் பயன்படுத்தப்படுகின்றன. தேரினை ஜெயதுர்கா மற்றும் தேரோட்டி அர்ஜுனன் பாதுகாக்கிறார்.
ரத யாத்திரையைப் பார்த்தாலே 1000 யாகங்கள் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், ரத யாத்திரையில் ஸ்ரீ ஜகந்நாதரின் நாமத்தை ஜபித்துக்கொண்டு குண்டிச்சா நகருக்குச் செல்பவர், மறுபிறப்பின் சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைகிறார் என ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: தீபாவளி வரை இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம்
ஜெகன்நாத் ரத யாத்திரை கொண்டாட்ட விபரம்
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 7, 2024
ஜூலை 7 ஆம் தேதி, ஜெகநாதர், பலராம் மற்றும் சுபத்ரா ஆகியோர் தேர்களில் அமர்ந்து, புறப்பட்டு குண்டிச்சா கோவிலை நோக்கிச் செல்வார்கள். ரத யாத்திரையின் முதல் நாள் நண்பகல் வேளையில் மூன்று தெய்வங்களும் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்படுவார்கள். பின்னர் புகழ்பெற்ற சடங்கு ‘சேரா பஹாரா’ நிகழ்த்தப்படும். மேலும் மாலையில் பக்தர்கள் தேர் இழுக்க தொடங்குவார்கள்.
திங்கட்கிழமை, ஜூலை 8, 2024
ஜூலை 8 ஆம் தேதி காலை பக்தர்கள் மீண்டும் தேரை இழுக்கத் தொடங்குவார்கள். திங்கள்கிழமை தேர் குண்டிச்சா கோயிலை வந்தடையும். சில காரணங்களால் திங்கட்கிழமை அடைய முடியாவிட்டால், செவ்வாய்கிழமை அடையும்.
8-15 ஜூலை 2024
ஜூலை 8 முதல் 15 வரை, ஜெகநாதர், பலராம் மற்றும் சுபத்ராவின் தேர்கள் குண்டிச்சா கோவிலில் வீற்றிருப்பார்கள். இவர்களுக்கு பல வகையான உணவு வகைகளை தயாரித்து நைவேத்தியம் செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
16 ஜூலை 2024
ஜூலை 16 ஆம் தேதி, ரத யாத்திரை முடிவடையும், மேலும் மூன்று கடவுள்களும் தெய்வங்களும் திரும்ப வந்து ஜெகநாதர் கோவிலுக்கு வந்தமர்வார்கள்.
ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம். எனவே இங்கு மதிய உணவு தடபுடலான விருந்தாக சமைக்கப்படும்.
ஜகந்நாதருக்கு ஆறு முறை மகாபிரசாதம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. பிரசாதத்தை தயாரிக்க கோவிலில் உருளைக்கிழங்கு, தக்காளி, காலிபிளவர் போன்றவை பயன்படுத்தப்படுவதில்லை. பூரி ஜெகநாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. கோயில் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவிளிக்கும் வகையில், சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ