ராகுவுடன் இணைந்து குரு சண்டாள யோகம் தரும் குருப் பெயர்ச்சி! மணத் தடைகள் நீங்கும்

Jupiter Transit: திருமணம் நடக்க ஒருவரது ஜாதகத்தில் குருவின் இருப்பும், அவர் இருக்கும் இடமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில், வியாழன் சஞ்சாரம்  பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 11, 2023, 07:18 AM IST
  • சொந்த ராசியில் இருந்து நட்பு ராசிக்கு மாறும் குருவின் சுப பலன்கள்
  • தெய்வங்களின் குரு தேவகுரு பிரகஸ்பதி
  • திருமணத் தடைகளை நீக்கும் குருப் பெயர்ச்சி
ராகுவுடன் இணைந்து குரு சண்டாள யோகம் தரும் குருப் பெயர்ச்சி! மணத் தடைகள் நீங்கும் title=

தேவகுருவின் சஞ்சாரம் 2023: தேவகுரு என அறியப்படும் வியாழ பகவான், அனைத்து கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில், குரு என்ப்படும் பிரகஸ்பதி எனும் தேவகுரு வியாழன் அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகம் ஆவார். நமது வாழ்க்கையின் முக்கிய விஷயமான திருமணம் நடக்க ஒருவரது ஜாதகத்தில் குருவின் இருப்பும், அவர் இருக்கும் இடமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில், வியாழன் சஞ்சாரம் அனைவரின் வாழ்க்கையிலும் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். 

தேவகுருவின் பெயர்ச்சி

அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் ராசிகள் அனைத்திலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில், திருமணக் காரகரான வியாழனில் ஏற்படும் மாற்றங்கள், ராசிகள் அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் மாதத்தில் அஸ்தமித்து, பிறகு இயல்பு நிலைக்கும் திரும்புவார் வியாழன். அதேபோல, ஏப்ரல் 22, 2023 அன்று, தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறும் வியாழன், தனது நட்பு ராசியான மேஷத்திற்கு பெயர்வார்.

வியாழனின் இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். தொழில்-வேலையில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.

குருவின்  மாற்றதால் சுப பலன்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள்

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் அதிபதியான வியாழன் ஏப்ரல் 22-ம் தேதி மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார். உங்கள் அஸ்தமன வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இதன் தாக்கம், பணியிடத்தில் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.வாழ்க்கைத்துணையுடனான உறவில் பலம் ஏற்படும்.

பணியில், பதவி உயர்வு, முன்னேற்றம் ஏற்படும். அதே நேரத்தில், திருமணமாகாதவர்களுக்கு அதற்கான காலநேரம் கூடிவரும். வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள் 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் பெயர்ச்சி சாதகமாக அமையும். ஜாதகத்தில் வியாழன் பெயர்ச்சி எந்த வீட்டில் நடைபெற உள்ளது என்பதைப் பொறுத்து, நற்பலன்களின் அளவு மாறுபடும். பொருளாதார ரீதியாக பல நன்மைகள் ஏற்படும்.

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த நேரம் பயனுள்ளதாக இருக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். செல்வம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் பெயர்ச்சியானது, திடீர் பண வரவைக் கொடுக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். தடைபட்டு சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-சனி: இந்த ராசிகளுக்கு இது ஜாக்பாட் நேரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News