செப்டம்பரில் உருவாகிறது லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள்

Lakshmi Narayan Yogam: சில ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் பலன் தரும். அது தொழிலில் பெரிய வெற்றியையும் தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 2, 2022, 02:02 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பலன் தரும்.
  • செப்டம்பர் மாதத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகுவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும்.
  • வணிக வர்க்கம் பெரிய நன்மைகளைப் பெறலாம்.
செப்டம்பரில் உருவாகிறது லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு பம்பர் பலன்கள் title=

சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் புதன் சேர்க்கையை உண்டாக்கும்: செப்டம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் பலன் தரும். அது தொழிலில் பெரிய வெற்றியையும் தரும். கன்னி ராசியில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகும். சுக்கிரன் ராசி மாற்றத்தால் கன்னி ராசியில் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பலன் தரும்

செப்டம்பர் மாதத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகுவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும். வணிக வர்க்கம் பெரிய நன்மைகளைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்பு வரலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். நண்பர்கள் உதவியால் முக்கிய வேலையும் முடிவடையும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் அபார நன்மைகளை தரும்

செப்டம்பர் மாதம் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களின்  தடைபட்ட வேலைகளை நிறைவடையச்செய்யும். வேலை செய்பவர்கள் நன்மை அடைவார்கள். வேலை பாராட்டப்படும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். முதலீடு லாபகரமாக முடியும். கடினமாக உழைத்தால் தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள்.

கடக ராசிக்காரர்கள் லக்ஷ்மி நாராயண யோகத்தால் அதீத சிறப்பு பலன்கள் கிடைக்கும்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் - சுக்கிரன் இணைவதால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் அவர்களின் தொழிலுக்கு உத்வேகம் தரும். சக ஊழியர்கள் உதவுவார்கள். பணத்தால் நன்மை உண்டாகும். நீங்கள் சொத்தை விற்க விரும்பினால், அது ஒரு நல்ல லாபகரமான ஒப்பந்தமாக முடிவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இந்த காலத்தில் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் லாபம் தரும்.

மேலும் படிக்க | வார ராசிபலன்: இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? 

கன்னி ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பம்பர் பரிசுகளை அள்ளித் தரும்

கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமும் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும், சேமிப்பிலும் வெற்றி பெறுவார்கள். சொத்து வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். மொத்தத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பீர்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் பலன் தரும்

தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும். பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். வேலை மாறுவதற்கான உங்கள் விருப்பம் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளந. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 15 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News