சனி பெயர்ச்சி..கும்ப ராசிக்கு இடம் மாறும், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

Shani Gochar 2023: புத்தாண்டு முதல் சனி மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசியில் அமர்வார். கும்பத்தில் சனி நுழைந்தால் பல ராசிகள் பாதிக்கப்படும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 27, 2022, 08:23 AM IST
  • இந்த ராசிகளுக்கு ஜனவரியில் விடிவுகாலம்.
  • சனிபகவானின் சிறப்பு அருள் கிடைக்கும்.
  • சனி பகவான் ராசி சக்கிரத்தை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும்.
சனி பெயர்ச்சி..கும்ப ராசிக்கு இடம் மாறும், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

சனி ராசி மாற்றங்கள் 2023: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் கர்மாவைக் கொடுப்பவராக இருப்பதால், ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவர் கர்மாவின்படி பலன்களை அவர் வழங்குவார். அதன்படி சனிபகவான் தனது ராசியை மாற்றியவுடன், பல ராசிக்காரர்கள் சனியின் ஏழரை ஆண்டுகளில் இருந்து விடுதலை பெறுகிறார்கள், அதே நேரத்தில் பல ராசிக்காரர்கள் அசுப விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சனியின் ராசி மாற்றம் எப்போது நிகழும்?
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சனி தனது சொந்த ராசியான மகரத்தை விட்டு வெளியேறி, அடுத்த ஆண்டு ஜனவரி 17, 2023 அன்று தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறது. பொதுவாக சனி பகவான் ராசி சக்கிரத்தை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும், எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனி பகவான் தற்போது வக்ர கதியில் மகர ராசியில் பயணம் செய்கிறார். பின்னர் மீண்டும் நேர்கதியில் பயணம் செய்யும் சனிபகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷம் ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார். எனவே இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஏழரை சனியால் பாதிப்பா? இந்த பரிகாரங்கள் போதும், அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

சனிப்பெயர்ச்சி அவதிப்படபோகும் ராசிகள்
நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை
ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் நுழையும் போது அதிர்ஷ்டம் உண்டாகும். ஜனவரி 17, 2023 முதல், ரிஷபம் ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பாக்யத்தைப் பாதிக்கும் சனியின் கோபம் நீங்கும். மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களின் பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும். செயல்களில் வெற்றி உண்டாகும்.

மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்கும்
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. இந்த ராசிக்காரர்கள் சனியின் சஞ்சாரத்தின் போது பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய ஜோதிட பரிகாரங்கள்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மிடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இந்த ராசிகளுக்கு தன ராஜயோகம்: கிரக மாற்றத்தால் எக்கச்சக்க பண வரவு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News