குரு உதயம்: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம்... குபேர யோகம்

Guru Udhayam Palangal: குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2024, 04:57 PM IST
  • மகர ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
  • பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
குரு உதயம்: 5 ராசிகளுக்கு அட்டகாசமான நேரம்... குபேர யோகம் title=

Guru Udhayam Palangal: அறிவு, செல்வம், திருமணம், குழந்தைகள் போன்ற காரணிகளின் அதிபதியாக இருப்பவர் குரு பகவான். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இவரது ராசி மாற்றம் மட்டுமின்றிம் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனத்து மாற்றங்களும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டில், மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். அதன் பிறகு அவர்  மே 7 ஆம் தேதி ரிஷப ராசியில் அஸ்தமித்தார். 30 நாட்கள் அமைஸ்தமன நிலையில் இருக்கும் குரு பகவான் ஜூன் 6 ஆம் தேதி அதே ராசியில் உதயமாவார். 

குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): 

குரு உதயம் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கல்வி மற்றும் அறிவாற்றல் சார்ந்த துறையுடன் தொடர்புடையவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியலுடன் தொடர்புடையவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். அவர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. உடல்நலம் மேம்படும். சில கடுமையான நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

சிம்மம் (Leo):

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியும் குரு உதயமும் நிதி ஆதாயத்தை அளிக்கும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத் திட்டம் வெற்றியடையும், வியாபாரத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளால் லாப விகிதம் அதிகரிக்கும். பழைய முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். இப்போது முதலீடு செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்க்காலத்தில் நல்ல லாபம் காணலாம். உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

கன்னி (Virgo):

கன்னி ராசிக்காரர்களுக்கு இம்முறை ஐடி, ஏஐ, கம்யூனிகேஷன் துறைகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தத் துறையில் தொடர்புடைய மாணவர்கள் நல்ல நிறுவனங்களில் வேலை பெறலாம். திரைப்படங்கள், டிவி மற்றும் OTT ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் புதிய அடையாளத்தைப் பெறலாம். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். ஆனால் கவனமாக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

மேலும் படிக்க | ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?

விருச்சிகம் (Scorpio):

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஆளும் கிரகமான குரு அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடியவராக இருப்பார். புதிய வேலை வாய்ப்புகள் வருவதால், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் வாழ்க்கையில் தடைகள் நீங்கும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமான வழிகள் உருவாகலாம். சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும் வாய்ப்பு உள்ளது.

மகரம் (Capricorn):

மகர ராசிக்காரர்களுக்கு, குரு பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வீட்டில் செழிப்பு இருக்கும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News