சுக்கிரனின் அருளால்... இந்த ராசிகளுக்கு மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும்..!!

Lucky zodiacs of Venus transit: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மகர ராசிக்கு சென்றார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2024, 06:53 PM IST
சுக்கிரனின் அருளால்... இந்த ராசிகளுக்கு மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும்..!! title=

Venus transit effects in Tamil: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மகர ராசிக்கு சென்றார். மார்ச் மாதம் ஏழாம் தேதி வரை மகர ராசியில் இருக்கும் சுக்கிரன், அதிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இந்நிலையில் சுக்கிரனின் பெயர்சியினால், சுகபோக வாழ்வை அனுபவிக்க போகும் சில ராசிகளை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக மார்ச் மாதத்தில், இந்த ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கும் எனலாம்.

சுக்கிரன் பெயர்ச்சியினால் பலன் அடையப்போகும் சில ராசிகள்

ரிஷப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

ரிஷப ராசியினர் சுக்கிர பகவானின் அருளால், வாழ்க்கை இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினால் நல்ல லாபம் பெறலாம். கவலைகள் அனைத்தும் நீங்கி, நிம்மதியான வாழ்வைப் பெற சுக்கிரன் உதவுவார். மன உறுதியும் கடின உழைப்பும் கை கொடுக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் மனதில் எழும். அதனால் நிதி ஆதாயமும் இருக்கும். பணத்தை முதலீடு செய்ய ஏற்ற காலம் இது. நீங்கள் விரும்பிய வருமானத்தை பெறலாம்

துலாம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியினருக்கு சுக்கிரனின் அருள் பரிபூரணமாக இருக்கும். துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன் என்பதால், பலன்கள் சிறப்பாக இருக்கும். நீங்கள் கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். குடும்பத்தினர் சுற்றுலா சென்று, மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினர் யாருக்கேனும் நீண்ட கால நோய் பிரச்சனை ஏதேனும் இருந்தால், அதிலிருந்து விடுபட்டு, அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும். உங்கள் செல்வ நிலை உயரும். உறவுகள் மத்தியில் நல்ல இணக்கம் ஏற்படும்.

கும்ப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசியினருக்கு சுக்கிரனின் ராசி மாற்றம், மனதிற்கு நம்பிக்கையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். அதனால் பணத்தட்டுப்பாடு பற்றிய கவலை ஏதும் இருக்காது. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு பரிபூரணமாக இருக்கும். குழந்தைகள் தேர்வுகளில் வெற்றி பெற்று, விரும்பிய பாடத்தை எடுக்கும் வாய்ப்பினை பெறுவார்கள்.

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!

சுக்கிரன் பெயர்ச்சி பரிகாரங்கள்

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய சுக்கிர பகவான் மனதை மகிழ்விக்க, வீட்டில் சுக்கிர பகவானின் படத்தை வைத்து வழிபடலாம். வெள்ளை குதிரையில், கையில் வாளை ஏந்தியபடி, கடல் அலைகள் மேலாக, சுக்கிரன் வருவது போன்ற படத்தை வைத்திருப்பது சிறப்பு என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். சுக்கிர பகவானின் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, சுக்கிர காயத்ரி மந்திரத்தை 27 முறை சொல்வது சிறந்தது. அதோடு அன்னை ஸ்ரீ மகாலட்சுமியை போற்றும் மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் படித்து வர பலன் கிடைக்கும். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்குவதும், சுக்கிர பகவானை மகிழ்விக்கும். பாதாம் முந்திரி போன்ற உலர் பழங்கள், திராட்சை மாதுளை போன்ற பழங்கள், வெள்ளை மொச்சை ஆகியவை சுக்கிர பகவானுக்கு ஏற்ற நைவேத்தியங்கள்.

மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News