உருவானது லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு பண வரவு.. அனைத்திலும் வெற்றி, லாபம்

Lakshmi Narayan Yog: லக்ஷ்மி நாராயண யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2023, 03:06 PM IST
  • புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவான லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
  • இவர்களுக்கு பண வரவு அதிகமாகும்.
  • தடைப்பட்டிருந்த பல பணிகள் இப்போது நடந்து முடியும்.
உருவானது லக்ஷ்மி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு பண வரவு.. அனைத்திலும் வெற்றி, லாபம் title=

சிம்மத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதெல்லாம், அது மக்களின் வாழ்க்கையில், அந்த கிரகம் தொடர்பான அம்சங்களில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனுடன், இதன் மூலம் உருவாகும் கிரகங்களின் கூட்டணியும் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

ஜூலை 7, 2023 அன்று, சுக்கிரன் கிரகம் சிம்மத்தில் பெயர்ச்சி ஆனது. இப்போது ஜூலை 25, 2023 அன்று, புதன் கிரகமும் சிம்ம ராசியிலும் பெயர்ச்சியடையும். இதன் காரணமாக சிம்மத்தில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படும். இந்த சேர்க்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நீடிக்கும். 

லட்சுமி நாராயண யோகம்

புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கும். இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இவர்கள் செல்வச் செழிப்பில் திளைப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்து சேரும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

லக்ஷ்மி நாராயண யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் உகந்தது

மிதுன ராசி:

புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவான லக்ஷ்மி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். தடைப்பட்டிருந்த பல பணிகள் இப்போது நடந்து முடியும். வருமானத்தில் உயர்வு இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

மேலும் படிக்க | நவம்பரில் சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகள் மீது அருள் மழை பொழிவார் சனி பகவான்

கன்னி ராசி:

கன்னி ராசி உள்ளவர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் உருவாவதால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். அனைத்து செயல்களிலும் வெற்றி உண்டாகும். திருமண சுகம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மூத்தவர்களிடமிருந்து தேவையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனியாக இருப்பவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும்.

துலாம் ராசி-:

துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். மேலும் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் லக்ஷ்மி நாராயண யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இவர்களின் தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். ஒரு பெரிய ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த  தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Love Horoscope: ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு ஒரே காதல் மழைதான்..! இன்றைய காதல் ராசி பலன்கள் இதோ..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News