ஏப்ரல் 8 சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்கு பண வரவு, தொழில் பெருக ஆம்பிக்கும்

Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தால் சில ராசிகளுக்கு சாதகமான தாக்கத்தை தரும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2024, 12:37 PM IST
  • ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
  • கிரகணம் நள்ளிரவு 2.22 மணிக்கு முடிவடைகிறது.
  • மேற்கு நாடுகளிலும் இந்த கிரகணம் பார்க்க முடியும்.
ஏப்ரல் 8 சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்கு பண வரவு, தொழில் பெருக ஆம்பிக்கும் title=

Surya Grahanam 2024: வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரி பண்டிகையைக்கு முன்னதாக இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழப் போகிறது. அதுமட்டுமின்றி இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தென்படாது. இருப்பினும், ஜோதிடத்தில், கிரகணம் அசுபமாக கருதப்படுகிறது. கிரகணம் கண்டிப்பாக அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சில ராசிக்கு சாதகமான பலன் தந்தாலும் சில ராசிக்காரர்களுக்கு பாதக பலனைத் தரக்கூடும். எனவே, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது நிகழும் என்பதையும், எந்த ராசிக்காரர்கள் மீது பாதிப்பு இருக்கும், மேலும் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய கிரகணம் எப்போது நிகழும்?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்குகிறது. இந்த கிரகணத்தின் உச்சம் இரவு 11.47 மணிக்கு நிகழ்கிறது.. கிரகணம் நள்ளிரவு 2.22 மணிக்கு முடிவடைகிறது.

சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது?
சூரியன் - பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், சூரியனின் ஒளி மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | இன்னும் 4 நாட்களின் இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை ஆரம்பம்: பெயர்ச்சியாகிறார் சுக்கிரன்

சூரிய கிரகணம் எங்கெல்லாம் பார்க்கலாம்?
வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் வடக்கு, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக், ஐரோப்பாவில் மேற்கு நாடுகளிலும் இந்த கிரகணம் பார்க்க முடியும்.

இது ராசிக்காரர்களை சூரிய கிரகணம் பாதிக்கும்:
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கிரகணம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காயம் ஏற்படலாம். கிரகண காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். நிதி இழப்பு நேரிடலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகணத்தால் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடல்நலம் பாதிக்கப்படலாம். தாயின் உடல்நிலை மோசமடையலாம். நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் தகராறு ஏற்படலாம்.

மீனம்: இந்த நாளில் மீன ராசிக்கு எதிர்மறையாக இருக்கும். மன அமைதி குலையும். மனதில் மன அழுத்தம் ஏற்படலாம். உடல்நிலையும் மோசமடையலாம்.

இந்த ராசிகளுக்கு தொழிலில் லாபத்தையும், செல்வ செழிப்பையும் தரும்:
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்திற்கு பிறகு கஸ்டங்கள் அனைத்தும் நீங்கும். நிதி நிலமை செழிப்படையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மரியாதை கிடைக்கும். வியாபாரம் மேம்படும், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் மதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பண வரவு ஏற்படும். தொழிலில் வருமானம் உயரும். நிதி பயணத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணத்தை திரும்ப பெறுவீர்கள்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வெளிநாட்டு பயணம் பெறலாம். புதிய முயற்சிகள் செய்ய ஆரம்பிப்பீர்கள். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் பல நன்மைகள் கிடைக்கும், வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளை பெறலாம். கடினமாக உழைத்தால் பலனை பெறலாம். முதலீட்டில் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மே 1 முதல் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News